சிங்கப்பூர் தேசிய தினம் 44

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


ஆழிகள் தொழும்
ஆசிய அரசி நீ

விளைக்க நீரில்லை
விளைய நிலமில்லை
ஆனாலும்
வற்றவே இல்லை
உன் வர்த்தக நதி

உலகெங்கும்
உன் உபநதிகள்
உலகம் சுற்றும்
உன் கிளைநதிகள்

ஊசிமுனையென
நீ முன்னேறு
உனைத் தொடரட்டும்
உலக நூல்
தைத்துப் போடு
நைந்துபோன பொருளியலை

உன்
தனத்தில் தானத்தில்
வனப்பில் வலிமையில்
உழைப்பில் உரிமையில்
தண்டிப்பில் மன்னிப்பில்
மலையென நிமிர்கிறது
உன் பெருமை
இதில் மழைக்குக்கூட
பொறாமை

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்