க்ரிக்கெட் கடவுள்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

விஜய்ஆனந்த ச


நம் நாட்டில் க்ரிக்கெட் ஒரு மதம்,
எம்மதத்திர்கும் சம்மதமான ஒரு மதம்,
இம் மதத்திர்க்கு இன்று முழு முதல் கடவுள் நீதான் சச்சின்.

சிறுவனான உன் திறனை கண்டு ‘சன்னி ‘ வியந்த போது
எதிர் பாராமல் உன்க்கு அணியில் இடம் கிடைத்தது.

பதினாறு வயதில் அதி வேக பந்து வீச்சை ஆடிய போது
இந்தியா உன்னை கண்டு வியந்தது.

பதினெட்டு வயதில் டெஸ்ட் சதம் அடித்த போது
உலகே உன்னை கண்டு வியந்தது.

மற்றவர் ஆட முடியாத பந்து வீச்சை இலாவகமாக நீ கையாண்ட போது
க்ரிக்கெட் உலகம் உன்னை மேதை என்றது.

ஆயிரம் கவலைகளை மறக்க செய்த உன் ஆட்டத்தின் நளினத்தை கண்ட போது
கோடானு கோடி ரசிகர்க்ள் இதயத்தில் இடம் கிடைத்தது

ஓற்றையாய் நீ நின்று வெற்றிகள் பெற்று தந்த போது
இந்தியா உன்னை கடவுள் ஆக்கியது.

மட்டை பிடித்து நீ களம் இறங்கிய போது
இடி ஓசையை மூழ்கடிக்கும் ஆரவாரம் கேட்டது.

நீ ரன்கள் குவித்த போது
உனக்கு இராஜ மரியாதை கிடைத்தது.

மற்ற எவறுக்கும் ஆஸ்திரேலிய அணி அஞ்சாத போது
உன்னை மட்டும் கண்டு நடுங்குகிறது.

உன் திறமையை கண்ட மெய் மறந்த போது
உனக்கு ‘டான் ‘னிடம் கிடைத்த பாராட்டு யாருக்கும் கிடைக்காதது.

உன்னை அமுக்க உன்னை போன்றவனை உன் இடத்தில் அனுப்பிய போது
அனுப்பியவனுக்கு சரிவு ஏற்பட்டு, வந்தவன் உன்னை குரு எனும் நிலை வந்தது.

இந்தியாவே தோல்விகளை கண்டு அழுத போது
நான் இருக்கிறேன் என்று சொல்லி
உன் சிஸ்யனோடு ஆடி கலக்கினாய்
துவண்ட நெஞ்சங்களுக்கு சற்றே நம்பிக்கை தந்துள்ளாய்.

இத்தனையும் சாதித்த உனக்காகவாது
இந்தியா வெல்லுமா கோப்பையை.

vijayanandc@hotmail.com

Series Navigation