This entry is in the series 20040909_Issue

புதியமாதவி


====

எங்கள் மேய்ச்சல் நிலம்
எங்கள் மாடுகளின் பால்
எங்கள் தயிர்ப்பானை
திருடியது நீ தான்
திருடர்களே
திருடியப் பொருளுக்கு
உரிமைக் கொண்டாடும்
தேவர்கள் சட்டம்

உன் கோவிந்தாக்களைத்
தூக்கிப்பிடிக்கும்
எங்கள் தோள்களுக்கு
இன்னும்
எட்டவில்லை
நீ திருடிய
தயிர்ப்பானை.

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை
—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation