குறுங்கவிதைகள்
கோவை புதியவன்
கோவிலுக்கு சென்றேன்
கடவுளோடு.
“என் அன்னை”
பள்ளத்தில் விழுந்தேன்
சுகமான வலிதானே?
விசாரித்தது காதல்
குலதெய்வ வழிபாடு
குடு;ம்பத்துடன் பயணம்
வீட்டுக் காவலுக்கு அம்மா
கடவுள் இல்லை
ஆனாலும் குவிகிறது தட்சணை
அரசியல்வாதி வீட்டில்
குடைக்குள் மழை
“ஏழையின் குடிசை”
கோவை புதியவன்
thendral_venkatguru@yahoo.co.in