கிரிஜா ராகவன் கடிதத்தை ஒட்டி சில சிந்தனைகள்

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

ஜெய்


கிரிஜா ராகவன் அவர்கள், வேண்டுமென்றால் மிசொரமுக்கு சென்று சாதி பார்க்காத ஹிந்துவாக வாழ்ந்து எல்லா அங்குள்ள பழங்குடியினரையும் ஹிந்துவாக மாற்றி ‘கிறிஸ்தவர்களா? அப்படியென்றால் யார்?’ என்று கேட்கும்படி செய்யட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை.

என்னுடன் படித்த எல்லா கிறிஸ்தவ நாடார்களும், கிறிஸ்தவ நாடார்களையே மணம் புரிந்தனர். யாரும் தலித் கிறிஸ்தவர்களையோ அல்லது பழங்குடிகளையோ மணக்கவில்லை. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி கிறிஸ்தவராக மாறி, திருப்பதி தேவஸ்தானத்தின் பல கோடி சொத்துக்களை சட்டப்படி திருடி கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எழுதிவைத்தாரே தவிர தான் தான் ஜாதிக் குறியீட்டை விடவில்லை. கிரிஜா ராகவன் கூட கிறிஸ்தவராக புனிதப் படுத்தப்பட்டால், மதப் பிரசாரகர்களான ‘பத்மா முதலியார்’ அல்லது ‘ராகவன் அய்யர்’ போன்று சாதிப் பெயருடன் பாவிகளை உய்விப்பாரே தவிர இவர் ஒன்றும் பழங்குடிகளான குறவர்களுடன் கல்யாண உறவு வைத்துகொள்ள மாட்டார்.

மற்றபடி பார்ப்பனர்கள் சிதம்பரத்தில் தமிழை எதிர்க்கவில்லை. ‘ஓதுவார்’ ஆறுமுக சாமியிடம் ‘பொன்னம்பல மேடையில் எல்லோரும் போல நீங்களும் ஏன் முறைப்படி கட்டணம் செலுத்தி பாடக் கூடாது?’ என்று கேட்டதுக்கு அவர் ‘ கம்யூனிஸ்டுகள் சொன்னபடி செய்தேன்.. அவர்களையே கேளுங்கள்’ என்று பதில் சொன்னார். இந்த ஒரு பதிலைச் சிந்தித்துப் பார்த்தாலே உண்மை விளங்கும். நடராஜர் கோவிலில் தமிழ் வளர்க்கும் கிரிஜா ராகவன் அவர்கள் மசூதிகளில் தமிழில் ஓதச் சொல்லுவாரா? தமிழ்க் காவலர் கருணாநிதியிடம் சொல்லி சிதம்பரம் கோவிலைப்போல் மசூதியை அல்லது தேவாலயத்தை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சொல்வாரா?

உபநயனம் செய்வதை ஏன் கிரிஜா ராகவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை? ஒருவருக்கு அவர்கள் விருப்பபடி எதையும் செய்யக் கூட உரிமை இல்லையா? உண்மையில் கிரிஜா ராகவன் போன்ற குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பாங்குள்ள , சிந்திக்க முடியாதவர்களே ஹிந்துக்கள் ஒற்றுமை இல்லாமல் இருத்தலுக்கும், மதமற்றங்களுக்கும் காரணம்.


Jay

Series Navigation

ஜெய்

ஜெய்