கால தேவா

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

சித்ரா


________

கால தேவா …

துரோகியை எதிர்க்கிற வேளையில்
நீமறைந்து எய்திய இராமபானம்
மார்பில பாய்கிற வரை
உன் இருப்பு புரியவில்லை.

பானையில் வைத்தவிட்டு வந்து
பார்க்கலாம் என்று திரும்பியபோது
வெற்றிடமான பானையை கண்டு – நீ
வந்துபோனது உணர்ந்து அதிர்ந்தேன்.

கால்சுவடு கைசுவடு இல்லையெனினும்
உன் கையொப்பம் – நான்
உருவாக்குகிற அனைத்திலும்

உன்னை கணிக்க முடியாததால்
உன்னை கடக்க சொல்கிறார்கள் – நீ
இராமபானம் எய்தினாலும்,
பூமழை பொழிந்தாலும்
அலட்சியமாய் இருந்தால் கடப்பதாகுமாம்

கணிக்கவோ,கடக்கவோ
முயன்று கொண்டேயிருந்தால்
என் காலம் முடிந்துவிடும் – நீயிருப்பாய்
ஜகஜால கில்லாடியாய்!

Series Navigation