காலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

அறிவிப்பு


யோக்வூட் அரங்கம்

1785 Finch Ave W

கனடாவில் இருந்து வெளிவருகின்ற தமிழ் சஞ்சிகையான காலம் இதழ் ஒரு இலக்கிய மாலை நிகழ்ச்சியை நடாத்துகின்றது.

புலம் பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற சஞ்சிகை என்ற வகையில் காலம் இதழ் மிக முக்கியமானது. எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் சுமார் பதினைந்து ஆண்டுகாலமாக காலம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருக்கின்றது. சராசரியாக வருடம் மூன்று இதழ்கள்களை வெளிவிடுவது என்பது வெளியீட்டாளர்களின் எண்ணம்.

இதுவரை இருபத்தி நான்கு இதழ்கள் வெளிவந்துள்ளன. இருபத்தி ஐந்தாவது இதழை ஒட்டியே இந்த நிகழ்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இருபத்தி ஐந்து இதழ் அல்ல, இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேலாக (தன் வாழ் நாள் முழுதுமாக) சிறுசஞ்சிகை நடாத்தி வரும் மல்லிகை ஜீவாவின் பேட்டியை எடுத்து பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடாந்து கொண்டுள்ளது.

‘மீண்டும் வருவார்கள் ‘ என்ற நாடகம் பாபுவின் இயக்கத்தில் நிகழ்கின்ற அதேவேளை>

நமது பாரம்பரிய இசையான கூத்து பாடல்கள் அடங்கிய DVD வெளியீட்டுவைக்கப்பட உள்ளது. அத்தோடு சில கூத்துப்பாடல்களும் இந்த மேடையில் பாடப்பட உள்ளது.

காலம் இலக்கிய மாலையின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையில் இருந்து மெளனகுரு, சித்திரா மெளனகுரு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

1785 Finch Ave உள்ள ‘யோக்வூட் அரங்கத்தில் இந்த விழா நடைபெறுகின்றது.

—-

chelian@rogers.com

Series Navigation