காதல் நாற்பது (18) ஒருபிடிக் கூந்தல் உனக்கு மட்டும்!

This entry is part [part not set] of 32 in the series 20070426_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇதைப்போல் எந்த மனிதனுக்கும் நான்
ஒருபிடிக் கூந்தலைத்
தருவதில்லை
உன்னைத் தவிர,
எல்லோரிலும் மிக்க இனியவனே!
சிந்தித்து
எந்தன் விரல்களில்
பழுப்பு வண்ண
முழுநீளக் கூந்தலைச் சுற்றி
“வாங்கிக் கொள்” என்று
வழங்கினேன்!
நீங்கின என்னிளமை நாட்கள்
நேற்றோடு!
முழங்கால் வரைக் கூந்தலினி
விழா தெனக்கு!
மலர் ரோஜாவைத்
தலையில்
சூடிக் கொள்வ தில்லை நான்,
மங்கையர்
சிங்கா ரிப்பது போல்!
வெளுத்த கன்னங்கள் மீது
துளும்பிடும்
கண்ணீர்க் கறையை மறைத்திடும்
தலைமயிர் இப்போது!
கீழே தொங்குவதால்,
சோகத்தின் கைத்திறன் மூலம்
சொல்லித் தரும் எனது
சிரத்தின் சாய்வு!
மரண வெட்டிகள்
முடியை நறுக்கு மென்று
முதலில் எண்ணினேன்!
ஆயினும்
நீ ஏற்றுக்கொள்,
நியாய மானது காதலிப்பது!
நெடுங் காலங்களாக
தூயதாய் உள்ளதெனக் காண்பாய்
தாயிங்கு
விட்டுச் சென்ற முத்தம்
மாயும் போது!

********************
Poem -18
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

I never gave a lock of hair away
To a man, dearest, except this to thee,
Which now upon my fingers thoughtfully,
I ring out to the full brown length and say
“Take it.” My day of youth went yesterday;
My hair no longer bounds to my foot’s glee,
Nor plant I it from rose or myrtle-tree,
As girls do, any more: it only may
Now shade on two pale cheeks the mark of tears,
Taught drooping from the head that hangs aside
Through sorrow’s trick. I thought the funeral-shears
Would take this first, but Love is justified,–
Take it thou,–finding pure, from all those years,
The kiss my mother left here when she died.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 23, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா