காதல் கிழியுமோ ?
Published June 7, 2003 • By
புகாரி
புகாரி

கருமுகில் கிழியலாம்
கடுமழை பொழியலாம்
மின்னல் கிழிக்க
வானம் கிழியுமோ
இருவிழி கிழியலாம்
விழிமழை பொழியலாம்
இன்னல் கிழிக்கக்
காதல் கிழியுமோ
ஒருவரை யொருவர்
உயிரெனத் தழுவி
இருமனம் உருகி
ஒன்றென ஆனபின்
இருட்டுகள் எப்படி
உறவினைத் தீண்டும்
ஈரேழ் பிறப்பும்
ஒளியே வீசும் !
*
buhari2000@rogers.com