காசு

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

பவளமணி பிரகாசம்


இருப்பு இல்லை வங்கியிலே,
இதயத்தில் பழுதில்லை,
இனிப்புன்ன தடையில்லை,
வெயிலும் மழையும் பொருட்டில்லை,
மெத்தப் படிப்பு படிக்கவில்லை,
மூன்று வேளை உணவில்லை,
நடைபாதை ஓரத்திலே,
நாற்றமடிக்கும் சூழலிலே
நாளை நகர்த்தும் குடும்பத்தில்
குறையில்லை குழப்பமில்லை-
கதகதப்பான கூட்டிலே
கவிதை போன்ற சுகமிருக்கு,
பாட்டிருக்கு சிரிப்பிருக்கு,
அடியிருக்கு அணைப்பிருக்கு,
நெருக்கமான உறவிருக்கு,
நேசமான மனசிருக்கு-
காசால் உலகை அளப்போர்க்கு
கருத்து ஒன்று இங்கிருக்கு.
—-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்