This entry is in the series 20031030_Issue

புகாரி


…………………………………

மொழியின் நார்களை
உருவி உருவி
கவிதைக் கூடுகட்டி
நானென்
எண்ணச் சிட்டுகளை
நாளெல்லாம் குடிவைத்தேன்

இன்று அவை
எனக்கே சொல்லித்தருவது
இனிப்பான பாடம்

என்
நாட்களில் அனுபவிக்கும்
அசைக்க முடியாச்
சத்தியம்

ஆம்,
கவிஞனொரு மாணவன்தான்
கவிதைகளே ஆசான்கள்!
======================================
buhari@rogers.com

Series Navigation