கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

ஹெச்.ஜி.ரசூல்


உமிக்கருக்கின் தவிட்டு மணத்திலும்,வெங்காரத் துருசின் கந்தக நாற்றத்திலும் உருண்டு புரண்டெழுந்த தாணுபிச்சையாவின் எழுத்துக்கள் அக்கசாலைத் தெருவின் அதிர்வுகளைப் புனைந்து கொள்கிறது

பஞ்சகருமார்களின் வாழ்வுப் புலம்சார்ந்த படிமங்களும் குறியீடுகளும் உருவகங்களும் அனுபவங்களுமாக தமிழ்நவீன கவிதையின் ஒரு வெற்றிடப் பரப்பை நிரப்பி உள்ளது.

தொன்மமும் வரலாறும் யதார்த்தமும் புனைவின் மொழியாகி உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் கவிதைபரப்பெங்கும் தன் ரேகைகளைப் பதித்துள்ளன்.

அரசவரலாறு அழித்தொழித்த தட்டார் சமூகத்தின் வரலாற்றுத் துயரங்களில் தாணுபிச்சையாவின் சொற்கள் நனைந்து கொள்கின்றன.நவீனம் தாண்டிய தமிழ்க் கவிதையின் கலாச்சாரவெளி புனைவுப் பரப்பில் கிளிக் கூண்டு சிமிக்கியுடன் மிதக்கிறது இந்த மகரபட்சி

வெளியீடு

திணை வெளியீட்டகம்

நாகர்கோவில்

பக்கங்கள்:80

விலை ரூ.50/

ஆசிரியர் முகவரி

தாணுபிச்சையா

11 டி பிச்சநாதன் காம்பவுண்ட்

கொம்மண்டையம்மன் கோயில் தெரு

வடசேரி,நாகர்கோவில் – 1

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்