கற்பூரவாசனை

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

நெப்போலியன்


அப்பொழுதுதான்
புதிதாய்
சுடச்சுட
எழுதி
முடித்திருந்த
என் கவிதையை
உன்னிடம்
முதலில்
காண்பிப்பதற்கான
உயிர் ஆவலுடன்
அதன்
மடிப்பு கலையாமல்
எடுத்து வந்தேன்.

நீயோ,
உயிரற்ற உணர்வுடன்
அதை வாங்கி வைத்துக்கொண்டு
‘ம்… துணிகளுக்கு
இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறேன் ‘
என்றாய்.

நான்
கசங்கிப்போனேன்
என்
கவிதை
அழுக்காகிக்கொண்டிருந்தது….
—- நெப்போலியன், சிங்கப்பூர்
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்