கனவுகளைத்தின்னும் இரவுகள்……..

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

அகிலன்


பற்கள் முளைத்த
இரவுகள்
கனவுகளைத் தின்று
கொழுத்தன….

தூக்கத்தை
சிறையிலடைத்த
இரவின் படைவீரர்
விழிகளைச் சூறையாடினா.;

என்றைக்கும்
இருக்கட்டும் இரவு.

நீள இரவின்
பெருமூச்சு…..
துப்பாக்கிகளினின்றும்
புறப்படுகிறது…
பெரும் ஊழியாய்.

என் கனவின் மீதியை
வானில் கரைக்கிறது
நடுநிசியில்
வீரிட்டுப்பறக்கும்
ஒரு பறவை…
—————————-
agiilan@yahoo.co.uk

Series Navigation