கண் கெட்ட பிறகே….

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

ஆனந்தன்.


என் நினைவுகள்
என்னைக் கேள்வி கேட்டது
என்றேனும் நான் செய்தது
எள்ளளவேனும் சரியா என்று!

என் மூச்சுக் காற்றே
என்னை வெறுக்கும்
மரணத்தின் படுக்கையில்
என் எண்ணங்கள் மட்டும்
இளமை ஊஞ்சல் ஆடியது!

நிஜங்களின் நிறம் தெரியாத வயதில்
நிறைய பொய் சொன்ன நினைவுகள்
நியாயத்தில் பார்த்தால்
நான் செய்தது சரியா…
பொய்களை மறைத்திருந்தால் – ஓர்
அரிச்சந்திரனாய் வாழ்ந்திருக்கலாம்!

பயப்படுவதற்கே பயந்து நடுங்கி
செத்துப் பிழைத்த இரவுகள் எத்தனை!
ஓடும் பாம்பை காலில் மிதிக்கும்
தைரியம் வளர்த்திருந்தால் – ஓர்
அலெக்சாண்டராய் வாழ்ந்திருக்கலாம்!

காமம் சாகடித்து
மண்ணாசை மறைத்து
பொன்னாசை ஒழித்து
பேராசை கொன்று
பற்றைத் துறந்திருந்தால் – ஒரு
புத்தனாய் வாழ்ந்திருக்கலாம்!

மாலையில் மறையும் கதிரவன்
நாளை மீண்டும் பிரகாசிப்பான்!
மேகம் கரைந்து மழையான நீர்
நாளை மீண்டும் மேகமாகலாம்!
பூத்து உதிர்ந்த பூவின்
இதழ்கள் மீண்டும் பூப்பதில்லை
சொல்லியவாறு – என்
உயிர் பிரிந்தது!

**
ஆனந்தன்
k_anandan@yahoo.com

Series Navigation

author

ஆனந்தன்

ஆனந்தன்

Similar Posts