This entry is in the series 20020505_Issue


தேவையான பொருட்கள்

1 வெங்காயம் சிறியது

1/2 கோப்பை முட்டைக் கோஸ் வெட்டியது

1 கோப்பை சாதம்

3 தேக்கரண்டி எண்ணெய்

மிளகுத்தூள் அரை தேக்கரண்டி

சீரகத்தூள் அரை தேக்கரண்டி

உப்பு தேவைக்கு ஏற்ப

சோய் ஸாஸ் தேவைக்கேற்ப

1 முட்டை

செய்மூறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதை எண்ணெயில் வதக்கவும்.

அதில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து வதக்கி வேகவைத்த சாதத்தை அதில் போட்டு தேவைக்கு சற்று குறைவாக உப்புப் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும்

முட்டை, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து அடித்துக்கொண்டு, அதை வேறொரு வாணலியில் ஊற்றி, மெதுவான தீயில், மூடி போட்டு வேக வைக்கவும். வெந்ததும், அதை சிறிய நீள் சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

முட்டை துண்டுகள் உடையாமல் சாதத்துடன் கலந்து, ருசி பார்க்கவும். இத்துடன் சிறிது சோயா சாஸ் தேவைக்கேற்ப கலந்து பிரட்டிக்கொள்ளவும். (சோயா ஸாஸிலேயே சற்று உப்பு உண்டு.)

Series Navigation