கணையும் கானமும்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

பசுபதி


விண்ணில் எய்தேன் அம்பொன்றை –மண்ணில்
. வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை
கண்பின் தொடர முடியாத — கடிய
. கதியில் கணையும் பறந்ததுவே.

விண்ணில் உயிர்த்தேன் பாடலொன்றை — மண்ணில்
. வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை.
கண்வலு நுட்பம் எவர்க்குண்டு — பறந்த
. கானப் பயணம் தொடர்வதற்கு ?

கண்டேன் பலநாள் கழிந்தபின்னர் — உடையாக்
. கணையை ஆல மரமொன்றில்
கண்டேன் மீண்டும் முழுப்பாடல் — என்றன்
. நண்பன் ஒருவன் இதயத்தில் .

[மூலம்: Longfellow ‘s ‘ The Arrow and the Song ‘]

pas@comm.utoronto.ca
~*~o0o~*~

Series Navigation

பசுபதி

பசுபதி