கடிதம் பிப்ரவரி 25,2005

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


உண்மையில் ராதா ராமசாமியுடனான வாக்குவாதத்தைத் தொடர விரும்பவில்லை. குழாயடிச்சண்டைக்கு இருக்கும் அடிப்படை நியாயம் கூட இல்லாமல் அந்த வசையாடலை விட கீழ்த்தரமானவொன்றை வாதம் என்கிற பெயரில் முன்வைக்கும் அம்மையாரிடம் கூற என்ன உள்ளது. எங்கள் ஊர் மீன்சந்தையில் இதைவிடத் தரமான மொழியாடலை கேட்கலாம் என்பதுதான் உண்மை. ரவி ஸ்ரீனிவாஸை நியோமனுவாதி என்றால் அம்மையாருக்கு ஆராசனை வருகிறது. அது சரி. ஒருத்தரை சொன்னால் இன்னொருத்தருக்கு ஆத்திரம் வரக்கூடாதா என்ன ? அதை வைத்துக் கொண்டு இருவரும் ஒன்று என்றோ அல்லது அம்மையாரின் பெயரில் வரும் கடிதங்களின் உண்மை நிழல் எழுத்தாளி இன்னொருவர் என்றோ சொல்லவா முடியும். அல்லது மேற்கத்திய மேதமை உரைகல்லில் தேய்த்தே அனைத்தையும் தரம் பார்க்கும் போக்கு – தவறு : இங்கே உரைத்து பார்ப்பதெல்லாம் கிடையாது சும்மா பேரை சொன்னாலே போதும் – url ஐ அடுக்கினாலே போதும் – இதெல்லாம் இரண்டு பேருக்கு ஒரே மாதிரி வாய்க்கப்பெற்றுள்ளமையால் அவர்கள் இரண்டுபேரும் ஒரே நபர் என்றாகிவிடுமா ? இல்லைதான். ஆனால் here we do have a deserving case for ESP – CSICOP take note!

ஒரு தகவல்பிழையை ஊதிப் பெரிதாக்குகிறதைத் தவிர வேறெவ்விதத்திலும் நான் கேட்ட கேள்விகளுக்கு, முன்வைத்த வாதங்களுக்கு அம்மையார் கூறும் பதிலென்ன ? குறைந்த பட்ச கருத்தொழுக்கம் இருக்கும் பட்சத்தில் மூலக்கூறு மைய சித்தாந்தத்திற்கும் ஏங்கல்ஸ் முதல் லைசென்கோ வரையாக ‘வளர்த்தெடுத்த ‘ மார்க்ஸீய சித்தாந்தத்திற்கும் இடையேயான மோதல் குறித்து ஒரு வாக்கியமேனும் பகர அம்மையாருக்கு முத்துதிர்க்க முடியவில்லை. அங்கே அந்த ‘ஃபோரத்திலே இதெல்லாம் சொல்லிட்டாங்களே ‘ என்று பரிதாபகரமாக கையைக்காட்டி சொதப்புகிறார் அம்மையார். நான் விளக்கமாக எழுதிய விஷயங்கள் மார்க்ஸிய சித்தாந்திகள் ஜகா வாங்கிய விஷயங்கள். 1940 இல் மார்க்ஸிய சித்தாந்திகள் நின்ற நிலைக்கும் ஆடிய ஆட்டத்திற்கும் இன்றைக்கு அவர்கள் போடுகிற ‘அது ஸ்டாலினிய திரிபு ‘ என்கிற நாடகத்துக்கும் அப்பால் அவர்கள் மெளனிக்கும் இடம் அது. 2000க்கு பின்னரும் இந்த மார்க்ஸிய-நியோடார்வினிய ஒவ்வாமை குறித்து முன்னணி பரிணாம உயிரியலாளர் கூறியவற்றை நான் மேற்கோள் காட்டமுடியும். இதற்கெல்லாம் அம்மையாரிடமிருந்தோ அல்லது இன்னபிற url-piling cerebral tragedies இடமிருந்தோ எவ்விதப்பதிலும் வராது என்பது தெரியும் – பொய்யன் புளுகன் என்கிற வசை மொழியைத் தவிர. இத்தகைய மொழிவளம் குழாயடிச்சண்டைகளில் நல்ல பலன்களை தரும் கருவிதான் ஆனால் இங்கல்ல என்பதை அம்மையார் புரிந்துகொள்ள வேண்டும் – அதற்கான உபகரணங்கள் அம்மையாரிடம் இருக்கும் பட்சத்தில். 1970களில் பொய்யென தெரிந்த ஒரு விஷயத்தை இங்கிலாந்தில் உள்ள முன்னணி அறிவியல்-தத்துவம் குறித்து ஆராயும் மார்க்ஸீய அறிவுஜீவி அதன் பிரச்சார தொனியுடன் பயன்படுத்தியுள்ளது 1999 இல். இதனை டாவ்கின்ஸ் வெளிகாட்டியுள்ளார். ஆனால் அதற்காக அந்த மார்க்ஸீய அறிவுஜீவியை வசைபாடவில்லை. இதற்கு பெயர் பண்பாடு. ஆனால் அம்மையாரின் பண்பாடென்ன ? இந்த தவறை சுட்டிக்காட்டியமைக்காக அம்மையாருக்கு நன்றி தெரிவித்த பின்னரும் அம்மையார் வசைபாடும் தரம் எந்த அளவில் உள்ளது ? ஏதோ ‘தெறமை ‘ என்றெல்லாம் அல்கா மொழியில் அடுக்கும் அம்மையாரின் வண்டவாளம் இன்றைக்கும் சுலேகாவில் காணக் கிடைக்கும். அதில் தெரியும் பண்பாட்டு வளமை மார்க்ஸியர்களுக்கே உரியது.

சங்கர மடத்தின் சட்டதிட்டங்கள் ஹிந்து தர்மத்தை முழுமையாக கட்டுப்படுத்துபவை அல்ல. ஹிந்து சமுதாயத்தின் முழுமையான ஏற்பினை சங்கர மடாதிபதிகள் கோரியதும் அல்ல. ‘நான் சொல்லுவதை முழுசா நீங்க கேட்க மாட்டாங்க என்று தெரியும். ஏத்துக்கிறதும் ஏத்துகிடாததும் உங்க இஷ்டம் ‘ என்கிற பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரல் ஜனநாயகத்தின் ஆதார அடிசுருதி. எனவே அத்தகையதோர் தெய்வத்தின் பாதத்தின் தூசியையும் சிரத்தில் தாங்குவதில் நான் பெருமையும் புண்ணியமும் அடைவேன். அத்தகையதோர் மகானின் பல்லக்கினைத் தூக்குவதாக என்னைக் கூறியதற்கு அம்மையாருக்கு ஈரேழு ஜென்மங்களிலும் நன்றியுடையவனானேன். அதற்கு பொருள் நான் மனுவாதத்தையோ அல்லது பரமாச்சாரியார் கூறும் சமுதாய கருத்துக்களையோ ஏற்கிறேன் என்பதோ அல்ல. அம்மையாருக்கோ அல்லது திண்ணையில் முற்போக்கு ஆவேசம் வந்து ஆடும் அம்மணிகளில் வேறு எவருக்குமோ வேதம் கற்க வேண்டுமென உண்மையிலேயே ஆர்வம் இருக்கும் பட்சத்தில் தயை செய்து ராஷ்ட்ரீய ஸேவிகா சமிதியை அணுகுமாறு கோருகிறேன். பெண்களுக்கு வேதம் கற்றுத்தருவதுடன் வைதீக சடங்குகளை செய்யவும் அவர்கள் கற்பித்து வருகின்றனர். சங்கர மடத்தின் சட்டதிட்டங்கள் இதனை ஏற்காமல் இருக்கலாம், ஆனால் எந்த சங்கராச்சாரியாரும் ராஷ்ட்ரீய ஸேவிகா சமிதியினரை ஹிந்து மதத்திலிருந்து வெளியேற்றிவிடவில்லை. எந்த மனுவாதியும் சங்க அலுவலகத்தின் மீது பெட்ரோல் பாம் எரிந்துவிடவில்லை. எனவே அம்மையாருக்கோ அல்லது வேறெந்த பெண்மணிக்குமோ எவருக்குமோ வேதம் கற்க வேண்டும்; ஓத வேண்டும் என்கிற மாதிரி எண்ணங்கள் இருந்தால் தாராளமாக சங்கத்தை அணுகலாம்.

அடுத்த பதிலில் அம்மையாரோ என்ன கூறுவார் என்பதையும் ஊகிக்க முடியும். ‘நீ டார்வின்-மார்க்ஸை பற்றி சொன்னதற்கு என்ன பதில் ‘ என்று அதே பல்லவியை பாடி தமது மூளையின் வளமையை காட்டுவதை தவிர வேறென்ன செய்யமுடியும் இவரால் ?

—-

hindoo_humanist@lycos.com

Series Navigation

கடிதம் பிப்ரவரி 25,2005

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

கவிமதி


தமிழ்கூறும் நல்லுலகில் தமிழுக்கும், தமிழனுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலைதான் கவலைக்கிடமானது. இராமதாசும்,திருமாவளவனும் தமிழுக்கென்று சேர்ந்தது வரதன்களுக்கு ஏன் வெறுப்பாகிறது என விளங்கவில்லை. உலகளவில் பரந்துகிடக்கும் தமிழர்கள் திருமாவளவனை அழைப்பது அவர் சார்ந்த சாதியை வளர்ப்பதற்கன்று என்பது வரதன்களுக்கும் தெரிந்தாலும் நம் பங்கிற்கு நாமும் தமிழ் எதிர்ப்பை வெளிபடுத்தணுமே என்று எழுதியிருப்பதுதான் எரிச்சலூட்டுகிறது.

இப்படிப்பட்ட திண்ணைத் தூங்கிகளால் தான் இன்று தமிழன் போட்ட பிச்சை சோத்தை திண்றுகொண்டிருப்பவனெல்லாம் தமிழ் எதிர்ப்புபற்றி தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு பேசுகிறான். இதில் தேவையில்லாமல் அறிவுமதியை வேறு வம்புக்கிழுத்திருக்கிறார். சன் டாவியின் பெயரை தமிழ்படுத்துவாரா என்று திருமாவளவனிடம் கேட்ட இவர் அது சம்மந்தமான தமிழறிஞர்களிடம் கேட்பாரா ? அறிவாலயத்திற்கு அறிவில்லையென்றால் அதற்கு திருமாவளவனா பொறுப்பு! அறிவுமதி போல அறிஞர் ஒருவரின் சொந்த விஷயங்கள் பற்றி பேசுவதற்கு முன் அவரைப்பற்றின ஆழ்ந்த, தெளிவான சிந்தனைவேண்டுமென்பது வரதனுக்கு தெரிய வில்லையெனில் இனியாவது கற்றுக்கொள்ளவும்.

இன்றைய சூழலில் பெரும் பெரும் அரசியல் கட்சிகளெல்லாம் நடிகன்,நடிகைகளை வைத்தே ஓட்டுப்பிச்சை எடுத்து அரசியல் நடத்திக்கொண்டிருந்தாலும் அதே கோடம்பாக்கத்தில் இருந்துக்கொண்டு தமிழுக்காக எதையும் விடுவேன் என வாய்சவடால் அறிக்கை விட்டுக்கொண்டிராமல் சொல்வதை செய்துகாட்டும் திறனும்,தைரியமும்,ஆற்றலும் அறிவுமதியைத்தவிர திரைப்படப்பாடல் என்ற பெயரில் தமிழையும்,தமிழச்சிகளையும் கொச்சைபடுத்தி பிழைப்பு நடத்தும் கவிஞர்களில் வாலி தொடங்கி நாளை வரப்போகும் எந்த கவிஞனுக்கும் அருகதையில்லை என்றேகூறுவேன்.

இவருக்கு தமிழ் வளர்க்க வக்கில்லை அல்லது பொருப்பில்லை அடுத்தவர்கள் செய்வதை குறைகூற ,வரதன் தனது தமிழ் எதிர்ப்பு பற்றி நேர்ிடையாக சொல்லாமல் திருமாவளவன்,இராமதாசு இணைப்ப்ின் அவசியம் பற்றியும், தமிழ்,தமிழன் என்றுமட்டுமே வாழும் அறிவுமதி பற்றியும் பேசி மறைமுகமாக தனது தமிழ் புறக்கணிப்பை வெள்ிப்படுதியிருக்கிறார் என்பது அவர்ின் கட்டுரையில் உடைக்ிறது. ரெட்டைமலை சீனிவாசன் அவர்களை ஒதுக்கிவைத்து விட்டு திருமாவளவன் என்றுமே தமிழியம் பேசுவதுகிடையாது. அம்பேத்கருக்கும்,ரெட்டைமலை சீனிவாசனுக்கும் இடையே உள்ள மொழிகுறித்த சிந்தனைய்ில் அவர் தெள்ிவாக இருக்கிறார்.

இரண்டு பெரும் சமுதாயத் தலைமையின் இணைப்பென்பது அவ்விரண்டு சமுதாயத்தின் பரவலான ஒற்றுமையே என்பது தெரியாதா ? கடலூர் மாவட்டத்தினர் பற்றி இவர் ஏன் கவலைகொள்கிறார் என்று வ்ிளங்கவில்லை. இனிமேலும் பாகுபாடுகள் வேண்டாம் தமிழன் தனக்குத்தானே அடித்துக்கொண்டு அடுத்தவனுக்கு இடமளிக்க வேண்டாம் என்பதே இவ்விணைப்ப்ின் கருத்து இது வேண்டாம் காலகாலமாக பிரிந்துகிடக்கும் சமுதாயம் அடித்துக்கொண்டேயிருக்கட்டும் அதைவைத்தே அரசியல் பிழைப்பு நடத்தலாம், என்று நினைக்கும் பெரும் கட்சிகளின் நினைப்பில் தான் மண்விழுந்ததென்றால் வரதனுக்கு என்ன வாய்க்கு கிட்டாமல் போய்விட்டதென்று விளங்கவ்ில்லை.

திண்ணைகிடைத்து விட்டது என்பதற்காக தூங்கபடுத்துவ்ிட்டால் பார்ப்பவர்கள் பர்ிதாபபடுவார்கள் இந்நிலையில் தான் வரதன்னகளை பார்க்கமுடிகிறது. எங்கோ கண்ணுக்கு தெர்ியாமல் இருந்துக்கொண்டு எழுதும் வரதன் கொஞ்சம் கவனமாக எழுத்ினால் நல்லது. எழுத்தாளனுக்கு பாச்ிசம் கூடாது இருந்தால் பகைமையினை வளர்க்கும். பரபரப்பிற்காக எழுதிபழகும் வரதன் இனிவருங்காலத்திலாவது பக்குவமாகவும் எழுதுவார் என்று நம்புவோம்.

உரிமையுடன்

கவிமதி

துபாய்

kavimathy@yahoo.com

Series Navigation

கடிதம் பிப்ரவரி 25,2005

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

தமிழ்


வணக்கம்,

கடந்த சில வாரங்களாக அனைவரும் திருமா,ராமதாஸ் இருவரையும் கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவே வைத்துக்கொள்வோம் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டதக்கவை தான். இதையே கலைஞரோ ஜெயலலிதாவோ செய்திருந்தால் புகழ்ந்திருப்பீர்கள்.

தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய விஷயங்களில் முக்கியமானது சினிமா. கோடிஸ்வரரான தொழிலதிபர் முதல் கடைகோடியில் உள்ள சாதாரண கூலித் தொழிலாளி வரை சினிமாவின் வசீகரத்திற்கு கட்டுப்படாதவரே இல்லை என்று சொல்லாம். —- இந்த செய்தி 14-02-2005 குமுதம் இதழில் வந்தது.

இப்படி தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய சக்தி படைத்த தமிழ் சினிமாவை தமிழுக்காக தமிழில் பெயாிடுங்கள் என்பது தவறான விஷயமா ? ? ?

பக்கத்து மாநிலமான கர்னாடகாவில் பிற மொழி படங்களை வெளியிடும் திரையங்குகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். ஆனால் பழம்பெரும் மொழியான நமது தமிழ் மொழிக்கு தமிழில் பெயாிட வார்த்தைகள் இல்லையா ? ? ?

சாி விடுங்கள் கமல் போன்ற தத்துவ ஞானிகள் சொல்வது போல நடைமுறையில் பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்கமுடியாதது என வைத்துக் கொள்வோம். சூாியா என்ற ஒருவன் சொல்கிறான் BF என்பது Best Friend என்று BF க்கு புது விளக்கத்தை தொிந்து கொள்ளுங்கள். இது போன்ற செயல்கள் உங்கள் கண்ணுக்கு தொியவில்லையா ? ? ? ? BF என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் உங்களை சந்தோஷமடைய செய்கிறதா…

தமிழ் மொழி மீது ஒருவன் தன் அரசியல் ஆதாயத்திற்கோ அல்லது தமிழுக்கோ குறள் கொடுக்கும் போது அதை ஏன் ஏளனம் செய்கிறீர்கள் ?

ஏளனம் செய்யும் நீங்கள் எப்போதாவது குறள்கொடுத்ததுண்டா தமிழுக்காக ? ? ?

வாஜ்பாய் & கமல் கவிதை எழுதினால் ஒன்றுமே இல்லை என்றாலும் புகழ்வீர்கள். விளங்கவில்லை என்றாலும் கருத்துமிக்க கவிதை என்பீர்கள்.

ஆனால் ஒரு திருமா குரல் கொடுத்தால் அரசியல் என்பீர்கள்.

(மேலும் திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் கமலுக்கு எழுதிய கடிதத்தை http://www.kumudam.com/kumudam/291104/pg7.php என்ற இனைய முகவாியில் காண்க.)

(இந்த மடல் திண்ணையில் வரும் என்ற நம்பிக்கை இல்லை இருந்தும் திண்ணைவின் வாசகன் தமிழின் வெறியன் என்ற காரணத்திற்காக அனுப்புகிறேன்)

அன்புடன்

தமிழ்

—-

tamilguyy2k@yahoo.com

Series Navigation