திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கடிதம்- செப்டம்பர் 23,2004

This entry is in the series 20040923_Issue

பா. ரெங்கதுரை


மெய்மையின் மயக்கம் தொடரின் வாயிலாக சோதிப் பிரகாசம் அவர்கள் தொடர்ந்து போலி மார்க்சி ?டுகளைத் தோலுரித்துக் காட்டிவருகிறார். குறிப்பாக எஸ்.வி. ராஜதுரையின் அரைவேக்காட்டுத்தனம் பற்றி அவர் எழுதியதைச் சொல்லலாம். மேலும் மார்க்சியத்தையும் தெரிந்து கொள்ளாமல், அழகியலையும் அறிந்து கொள்ளாமல் தன் அறிவீனத்தையே மார்க்சிய அழகியல் என்று கொண்டிருக்கும் கோவை ஞானியையும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுபவர்களையும் அடையாளம் காட்டுவதில் சோதிப் பிரகாசத்தின் பங்கு மிக முக்கியமானது. ஜெயமோகன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் இனியேனும் கோவை ஞானி போன்ற போலிகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பா. ரெங்கதுரை

சியாட்டல், அமெரிக்கா.

rangaduraib@rediffmail.com

Series Navigation

About பா. ரெங்கதுரை

பா. ரெங்கதுரை

View all 8 articles →

கடிதம் செப்டம்பர் 23,2004

This entry is in the series 20040923_Issue

சூரியா


ஆசிரியருக்கு

வைக்கோ பற்றிய குறிப்பை படித்தேன். எந்தவிதமான தார்மீக அடிபப்டையும் இல்லாத திராவிட இயக்கக்குப்பைகளுள் ஒன்றுதான் வைகோ அதில் எந்த சந்தேகமும் இல்லை. மேடையில் அவரது வெற்றுப்பேச்சு கமாண்டோ போல ,உடையணிந்து ஆடும் அபத்தநாடகம் எல்லாமே கோமாளிக்கூத்துதான். ஆனால் இன்று தமிழ் நாடு ஒரு ஆபத்தில் இருக்கிறது . முரசொலி மாறன் குடும்பம் தமிழகத்தையே சுருட்டி உண்ணும் நிலையில் உள்ளது. வரும் தேர்தலில் திமுக நல்ல மெஜாரிட்டியிலே ஜெயித்துவிட்டால் அதன்பிறகு அவர்களை கட்டுப்படுத்தும் சக்தியே இல்லை. சினிமாக்கரர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதே சொன்னவிலைக்கு படத்தைக் கேட்டு மிரட்டுகிறது சன் டிவி. மாறன் குடும்பம் தமிழகத் தொழில்களில் பலதை விலைக்கு வாங்கிவிட்டது. ஆகவே சசிகலாவா மாறனா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி . அதற்கு ஒரு மாற்றுப்பதில் வைக்கோ. அவர் ஜெயித்தால் தமிழகத்துக்கு நல்லது. கருணாநிதிக்கு ஒரு செக் வைத்து ஒரு கட்டுப்படுத்தும் சக்தியாக ஆனால்கூட நல்லதுதான். ஆகவே வாழ்க வைக்கோ. வருக வைக்கோ.

சூரியா

suurayaa@rediffmail.com

Series Navigation

About சூரியா

சூரியா

View all 11 articles →