கடிதம் அக்டோபர் 28,2004 – பெயர் சூட்டும் பெருந்தகையோரே!

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

இப்னு பஷீர்


கிணற்றுத்தவளைகள்

லோகஸ்ட் பூச்சிகள்

மெமிட்டிக்( ?) க்ளோன்கள்

வகாபிய க்ளவுன்கள்

விசிலடிச்சான் குஞ்சுகள்

இவையெல்லாம் சமீப காலத்தில் சில அறிவார்ந்த பெருமக்களால் ‘திண்ணை’யில் வைத்து சூட்டப்பட்ட பெயர்கள்.

ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு பெரியவரை ஒருவன் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடினான். அதைக் கேட்டு அந்த பெரியவர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் புன் சிரிப்புடன் இருந்தார்.

அதைக்கண்ட அவரது நண்பர் ஒருவர், “என்ன நீங்கள், அவன் திட்டுவதற்கெல்லாம் மறுத்துப் பேசாமல், கோபப்படாமல் இருக்கிறீர்களே ?” என்று வியப்புடன் கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர், “ஒருவர் எனக்கு ஒரு பொருளை அன்பளிப்பாக அளிக்கிறார், அந்த பொருள் எனக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ கொஞ்சமும் பயனளிக்காது என்றால் நான் என்ன செய்யவேண்டும் ?” என்று கேட்டார்.

“கொஞ்சமும் பயனளிக்காது என்றால், கொண்டு வந்தவரையே திரும்ப எடுத்துக் கொள்ள சொல்வதுதான் முறை” என்றார் நண்பர்.

“அதைத்தான் இப்போதும் செய்தேன்” என்றார் பெரியவர். “அவரது கடினமான வார்த்தைகள் எனக்கு தேவைப்படாது. அதனால் அவற்றை அவரே திரும்பப் பெற்றுக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன்”

பெயர் சூட்டும் பெருந்தகையோரே! நீங்கள் இறைத்த மேலே குறிப்பிட்ட வார்த்தைகளையும், இன்னும் சொல்ல விட்டுப்போன இத்தகைய வார்த்தைகளையும், தயவு செய்து நீங்களே திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்!

குர்ஆன் கூறுகிறது: “…உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள். நம்பிக்கை கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப்பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்” — 49:11

இப்னு பஷீர்

—-

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்