This entry is in the series 20040325_Issue


1 கிலோ கடலைப்பருப்பு

1 கிலோ சர்க்கரை

1/4 கிலோ நெய்

1 துண்டு பட்டை

1 லிட்டர் பால்

5 பாதாம் பருப்புகள்

5 பிஸ்தா பருப்புகள்

10 காய்ந்த திராட்சைகள்

4-5 பச்சை ஏலக்காய்கள்

குங்குமப்பூ சிட்டிகை

செய்முறை

கடலைப்பருப்பை கழுவி அதனை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

இந்த பருப்பை பாலில் மெதுவான தீயில் பால் வற்றும்வரைக்கும் வேகவைக்கவும். இதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். நெய்யை ஒரு பாத்திரத்தில் சூடாக்கி அதில் பட்டை ஏலக்காய் போட்டு அதில் இந்த கலவையைக் கொட்டவும். பழுப்பு நிறம் வரும் வரைக்கும் சூட்டில் கலக்கவும். பாத்திரத்திலிருந்து இந்த கலவை பிரிந்து வரும் வரைக்கும் கலக்கி, அவ்வாறு வரும்போது சர்க்கரை, காய்ந்த பருப்புகள் போட்டு இன்னும் 5 நிமிடம் கலக்கவும். இதனை ஒரு நீண்ட நெய்தடவிய தட்டில் ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

Series Navigation