கடலாமைக் குஞ்சுகள்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

அம்ாிதா ஏயெம்


உருளை, உருளை அலைகளாய் சுருண்டு கொண்டிருந்த அந்தக் கடல் என்னையும், சசியையும் மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி வருமாறு வரவேற்றது. அந்தக் கடலின் U வடிவக் குடாக்கரையெங்கும் தோணிகளும் படகுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தன. என்னவோ தொியாது. கடல் என்றால் அமைதியான நீண்டு விரவிய ஒரு பெரு விருப்பு. என் கதைகளிலெல்லாம் அறிந்தோ அறியாமலோ அல்லது தொிந்தோ தொியாமலோ கடல் தலைகாட்டிவிடும். எனது இறுதி வருடப் பாடங்கள் பூராக கடல்சார் உயிாியல், முலையூட்டிகளின் உயிாியல், உயர்தர மீன்பிடியியல், மீன் உயிாியல், நீர் வளர்ப்பியல், உயர்தரச் சூழலியல் என்றெல்லாம் ஒரே நெய்தல்மயம். சாதிக்கப்பாற் கட்டமைக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவனாயினும் எனக்கு கரையோரமாகத்தான் இருக்கப் பிடிக்கும். ஏனெனில் அங்குதான் மீனிருக்கும். மீன்பிடியிருக்கும். கடலிருக்கும். நீலமிருக்கும். தூய்மையிருக்கம். வீரமிருக்கும். எனக்கு எப்போதும் கரையோரம்தான் பிடிக்கும். ஏனெனில் இனிமையான நீண்ட போராட்டம்கொண்ட வீரச்சாகச வாழ்வை விரும்பி ஏற்றவர்கள் இவர்கள். கடல் உள்ளே வராதே, வெளியே போ போ எனத் தள்ளிவிடும். இவர்களோ நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொண்டு போவார்கள்;. கடல் மோதும். புஜங்களையும், கால்களையும், நெஞ்சுகளையும் வீங்கச் செய்து இடுப்பை குறுக்கச் செய்யும். கடல் வீரம் கொடுக்கும். கடல் போர்க்குணம் கொடுக்கும். கடல் தேசத்தின் இயக்கங்களின் வீரமான தலைவர்களைக் கொடுக்கும.; கடல் என் அதீத பிடிப்பு. தகழி சிவசங்கரன் பிள்ளையினது இனிய நிறைவேறாத தூய்மையான காதலின் கடல். சீற்றத்தையும், ஆக்ரோசத்தையும் உணர்வுபூர்வமாக உணரச் செய்த கடல். இது ஒரு வகைக் கடல். தோப்பில் முகம்மது மீரானினதோ அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் சமூகத்தின் கடல். வறுமையின் கோரத்தை, அடக்குமுறையை, ஏமாற்றத்தை உணரச் செய்த கடல் இது. டக்ஸ்பொி, ஹெரால்ட் தேமன்களின் “ கடலின் நிறம் நீலம், நீலத்தின் நிறம் ஞானம். ஞானம் என்பது இன்னது இன்னது ‘ என்று சொன்ன கடல். அறிவுக் கடல். இது ஒரு வகைக் கடல். ஜேம்ஸ் கமரூனினதோ வீரதீர அதிசய பிரமிப்புக் கடல். யுத்தப் போட்டியை, ஆயுத மோகத்தை வெறுக்க வைத்தது ஒரு கடல். இன்னொரு கடலோ கப்பலின் மேல்தட்டின் மீதான கீழ்த்தட்டின் மனிதாபிமானத்தை காட்டி என் தூக்கத்தை நான்கு நாட்களாக கெடுத்த கடல் ஒரு வேளை ஒரு கிராமத்தை நடுவே ஊடறுத்துப் பாயும் ஆற்றோரத்தின் அருகே பிறந்ததாலோ என்னவோ எனக்கு நீர் பிடித்தது. கடல் பிடித்தது. பிடிக்கின்றது.

சிவா, தி எமர்ஜென்சி ஒபிசர், நின்று கையைக் காட்டினான். நானும், சசியும் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி சிவாவிடம் போக படகு ஜெயபாலுடனோ அல்லது ஜெயபாலுடன் படகோ தயாராக இருந்தது.

**

அலையை எதிர்த்து நீரைக் கிழித்துக் கொண்டு, மூக்குப் பாகம், நீரைவிட்டு மேலெழும்ப படகு பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்புதான் இந்தக் கடலில் கடலாமைகளுக்கு ஏதோ பிரச்சினையாம் என்று தகவல் ஒன்று வர, உடனே நானும், சசியும் கெம்பஸிலிருந்து கிழக்குப் பக்கம் ஏழு கிலோமீற்றர் தொலைவிலுள்ள, (இந்த தூரம் பூராக இருமருங்கிலும் இருக்கும் பசுமையான காடுகள் இன்னும் மூன்று வருடங்களுக்குள் பிறகு எாியூட்டப்பட்டு அழிக்கப்படும். இந்தக் கடற்கரைகளிலோ பொியதொரு முட்கம்பி முகாம்வந்துவிடும், நான் சோதனைக்குள்ளாக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்படுவேன் என்று எனக்குத் தொிகிறது) இந்தக் கடற்கரைக்கு வந்து சேர்ந்த பின்னர் சிவாவுடன் இணைந்து அந்த ஆமைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தெற்குப் பக்கம் தூரத்தில் வெள்ளையாய் ஏதோ தொிந்தது. அது ஆமையாயிருக்கும் என்று, படகு அதனை நோக்கி பாய்ந்து சென்றது. ஆனால் அங்கே பொிய சுறா மீன் செத்து மிதந்து கொண்டு எங்களை ஏமாற்றிவிட்டிருந்தது. வெள்ளையாய்த் தொிபவைகள் வழமையாக எங்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்னும் வேகமாக படகு போய்க்கொண்டிருக்கிறது. சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் போனவுடன் பத்துப்-பதினைந்து சிறிய தோணிகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. படகின் என்ஜினை நிறுத்தி அவர்களுக்கு அருகே மெல்ல மெல்ல படகு சென்றது. “இங்கே எங்கேயாவது கடலாமைகளை கண்டாங்களா” என்று அவர்களைப் பார்த்து சத்தம்போட்டுக் கேட்டேன். அவர்கள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. திரும்பவும் கேட்டேன். கரையே தொியாத அந்த நீலச் சீலையின் மேல் தாலாட்டுப்பட்டுக் கொண்டிருந்த சிறிய தோணிகள் எல்லாம் உடனே வாிசையாய் அணிவகுத்தன. ஓரு தோணியில் பீடி குடித்துக் கொண்டிருந்தவன் பீடியையும் கடலுக்குள் தூக்கியெறிந்துவிட்டான். வடக்குப் பக்கம் ஒரு குடாவைக் காட்டி அங்கேதான் கிடக்கும் என்றார்கள். ஏன் உடனே பதில் சொல்லவில்லை என்று கேட்டேன். கடலுக்கு சொந்தமான படை என்று பயந்து விட்டார்களாம். நான் நீலமும், நீலமும், சசியும் அதே மாதிாித்தான். சிவாவின் உடுப்பும் கூட முரட்டு துணிதான். கடலுக்குப் போகும்போது மேற்சட்டையாவது சிவப்பு போட வேண்டும் அப்போதுதான் ஆபத்தென்றால் யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என்பார் எனது ஆசிாியர். அவருக்கெங்கே தொியப் போகிறது போலிக்கோலச் செய்முறை. வாழ்வின் மீதான சின்னச் சின்ன கூறுகள் கூட நடுக்கடலுக்குள் கூட அச்சத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. கடலுக்குள் தூக்கியெறிந்த பீடியானது கடலுக்குள் மூழ்கி இறப்பதற்கு சற்று முன்னால் கக்கிய புகையானது காற்றிலே கரைந்து கடலில் எழுதியது

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக

எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக

எங்கள் முதுகில் கசையால் அடிக்குக

எங்கள் முதுகுத் தோல் பிய்ந்தூிந்து போகட்டும்.

என்று சசியின் கவிதையாய்த் தொிந்தது.

பின்னர் ஜெயபால் வடக்குப் பக்கம் நோக்கி படகைச் செலுத்தத் தொடங்கினான். அங்கே ஏதோ வெள்ளையாய் மேலே போய்க் கீழே வந்து அமிழ்ந்து மிதந்து கொண்டிருந்தது. நன்றாகப் பார்த்தால் மேலே வரும் போது மாங்காய்த் தீவு வடிவம் பெறும். பின் அமிழும் போது மாங்காய்த் தீவு வடிவம் மெல்ல மறைந்து தண்ணீர் தேசமாகும். கடற் தண்ணீர் உப்புக் காிக்கும். கண்ணீரும் உப்புக் காிக்கும். எனவே கண்ணீர் தேசமெனலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் துப்பாக்கி வேட்டு, வெடிச் சத்தங்களின் பின்பு, தரையை முத்தமிடும் இரத்தத் திட்டுக்களும் மாங்காய்த் தீவு வரையும். துரோகியென ஒரு நாளில் அறிக்கையிடப்படுபவனின்; மூளையம், மூளி, மண்டையோட்டுச் சிதறல்களும் மாங்காய்த்தீவு வரையும். பின்னர் பூகோளமயமாதல் நடக்கும். மாமாவின் சிறு பையன் நிர்வாணமாக குறி நிமிர்த்தி பெய்ததும் தரையிலே உடனடியாக மாங்காய்த்தீவு வரையும் பின்னர் பூகோளமயமாதல் நடக்கும். நெடும் பயணத்து பஸ் குலுக்கலில் ஜன்னற் பிரயாணி கறுத்த வீதியில் எடுத்த வாந்தியும் மாங்காய்த் தீவு வரையும்.

படகு அருகே சென்றது. ஒரு ஆமை அமிழ்ந்து மிதந்துகொண்டிருந்தது. முதுகுப் பக்கம் கீழ்ப்பக்கம் வரத்தக்கதாக மிதந்து கொண்டிருந்தது. அந்த ஆமை இறந்துவிட்டிருந்தது. நான்கு அவயவங்களிலும் வெட்டுக் காயங்கள் இருந்தன. வயிற்றுப் பகுதி வெள்ளையாய் இருந்தது. இது பிளாஸ்ற்ரன் எனப்படும். லம்பொக், கொமொடோ தீவுப் பழங்குடிகள் இன்றும் போர்க்கவசமாக இதனைப் பயன்படுத்துகிறார்களாம். ஏழு பொிய வரைகளை மத்தியில் ஒரு கோடு குறுக்காக வெட்டியிருந்தது. அதன் முதுகுப் பக்கத்தை மேற்பக்கமாக புரட்டுவதற்கு படகிலிருந்தவாறே நீருக்குள் கையை விட்டேன். சசி கவனம் என்றான். சசி என் காலைப் பிடித்துக் கொள்ள மிகுந்த பிரயாசைப்பட்டு அலையின் ஏற்ற இறக்கங்களுக்கிடையே கடலாமையைப் புரட்டிவிட்டேன். சாியான பாரம். ஆகக் குறைந்தது இருநூறு கிலோவாவது இருக்கும். கராபேஸ் எனப்பட்ட முதுகுப் பக்கம் ஒலிவ் பச்சை நிறமாக இருந்தது. ஏழு வரைகள் இரு கரையோரங்களிலும் ஒழுங்கற்ற பெட்டிகளாய் அடுக்கப்பட்டிருந்தன. கடலாமைகளுக்கான அற்லசை எடுத்துப் பார்த்தேன். ஆங்கிலத்தில் ஒலிவ் றிட்லி ரேற்றல் (விஞ்ஞானப் பெயர் லெபிடோகீலிஸ் ஒலிவாசியே) என்றிருந்தது, ஆமை பாிதாபமாக கழுத்து வெளியே நீட்டப்பட்டிருக்க அவையவங்களில் இரத்தம் கசிந்து வெளியே வர செத்துவிட்டிருந்தது.

இந்த ஆமைகள் ஆண்டாண்டு காலமாக முட்டையிட்டு குஞ்சு பொாித்து இனம்பெருக்க பருவ காலத்தில் இந்தக் கடற்கரைக்கு பத்தாயிரம் கிலோமீற்றர் தூரமிருந்து இரவு நேரங்களில் நீந்தி வரும். கரையோரம் முன் காலால் கடகடவென மடு தோண்டும்.; நூற்றியிருபது தொடக்கம் நூற்றிஅறுபது முட்டைகள் இடும். பின் பின் காலினால் மூடும். பின் உடலால் மடுவை அடித்து இறுக்கி எதிாிகளிடமிருந்து தன் எதிர்காலச் சந்ததிகளைக் காப்பாற்றி எதிாியை அலைய வைக்க, அது எங்கும் அலைந்து, எங்கும் கூடுயிருக்கும் பிரமையை ஏற்படுத்தும். தன் இடத்திற்கு பயணப்பட்டுவிடும். பின் சில நாளில் முட்டைகள் முழுதும் பொாிக்கும். மண்ணைத் தோண்டிக் கொண்டு கடலாமைக் குஞ்சுகள் வெளியே வரும். நீரை நோக்கி ஓடும் அப்போது சிலவற்றை நாய்கள் சாப்பிடும். இன்னும் சிலவற்றை நாிகள் ஏய்த்துக் கொன்று விழுங்கும். தாய் தேடிப் போகையில் இன்னும் சில கொடுஞ் சுறாவால் தாக்குப் பட்டு கொல்லப்படும். இன்னும் சில கடும் நீரோட்டத்தினால் இழுக்கப்பட்டு பாறைகளில் மோதுப்பட்டு அழிக்கப்படும். மீதப்பட்டவை வெற்றிகரமாக பத்தாயிரம் கிலோமீற்றர் பிரயாணம் செய்து தாயை அடையும். தாயை அடைந்தவைகளில் வாழ்க்கைக்கான போராட்டத்தில் ஆயிரத்தில் ஒன்று தப்பி முழுமையாக வளரும் பின் எழுபது தொடக்கம் எண்பது வருடங்கள் வரை வாழும். இது எப்படிச் சாத்தியம் என விஞ்ஞானம் தலையைப் பிய்க்கிறது ? அப்படி இருக்குமோ ? இப்படி இருக்குமோ ? எனவெல்லாம் அனுமானங்கள் பின்னர் வெள்ளைத் தோலுள்ள விஞ்ஞானக்காரா;கள் காந்தப்புலம்தான் காரணம். அது கடலாமைக் குஞ்சுகளின். இன்ஸ்ற்றிங்ட் (இயல்பூக்கம்) நடத்தை என்கின்றனர். இன்னும் பிரச்சினைகள் தீர்ந்தபாடுகள் இல்லை. முடிந்த முடிபுகளும் இல்லை. சீமெந்துத் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அருகாமையிலிருக்கும் கடற்கரைகளின் கரைகளிலோ தூசிகள் படிந்து இறுகி, வெளியே வரவிடாமல் பொாித்த கடலாமைக் குஞ்சுகளை சாக்கொல்லும். இதற்காக மேற்கத்திய நாடுகள் நிதியொதுக்கி, ஆட்கள் ஒதுக்கி, சீமெந்துப் படை நீக்கி, கடலாமைக் குஞ்சுகளை நாி, நாய், சுறாக்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அல்லது காப்பாற்றுவதாக ஒரு வழியைக் காட்டி அதற்கு கடலாமைக் குஞ்சுகளின் பாதுகாப்பு என்று பெயாிடுவர். ஒரு கதை ஞாபகம் வருகிறது. சிறுவர்கள் கொஞ்சப் பேர் ஆமைக் குஞ்சுகளை வீதியில் போட்டு கற்களினால் அடித்துக் கொண்டிருந்தார்களாம். அவ்வழியால் வந்த பக்திப் பழமான உலக நடப்பு விவகாரங்களில் பொது நலத்தையே விரும்பித் தலையிட்டு மூக்கை நுழைக்கும் பொியவர், சிறுவர்களைப் பார்த்து ‘கடவுளே.. கடவுளே என்ன அநியாயம். இப்படியா ஆமைகளைக் கொல்வது. ஆமைகளை புரட்டிவிட்டு வயிற்றுப் பக்கம் கல்லால் அடித்தால் ஆமை இறந்துவிடும். கடவுளே!.. கடவுளே!.. நானென்டா இப்படியெல்லாம் ஆமையைக் கொல்லமாட்டேன். ‘ என்று மனம்நொந்து சிறுவர்களைக் கடிந்துகொண்டு சென்றுவிட்டாராம். உடனடியாகப் புன்முறுவல் பூத்த சிறுவர்களும் மிகவும் சந்தோசமடைந்து, ஆமைக் குஞ்சுகளைப் புரட்டிப் போட்டு கல்லால் எறிந்து கொன்றுவிட்டார்களாம்.

“கவனம்…” என்று சிவா கத்தினான். அப்போதுதான் ஒரு பொிய அலைக்கு படகு ஏறி இங்கியது. சிவா, தி எமர்ஜன்சி ஒபிசர், மேற்கத்திய, இருண்டகண்ட பல்கலைக்கழகங்களில் போர்க்கால முகாமைத்துவம், உளவியல் படித்தவன். ஒரு சர்வதேச நிறுவனத்தில் இறந்து போகும் கடலாமைக் குஞ்சுகளை அவரவர் வசம் ஒப்படைப்பதில் ஈடுபட்டிருப்பவன். “ நான் எல்லாமாக தொள்ளாயிரத்து இருபத்து மூன்று வயிற்றுப்பக்க வெள்ளை ஆமைக் குஞ்சுகளினதும், முதுகுப்பக்க ஒலிவ்பச்சை ஆமைக் குஞ்சுகளினதும் இறந்த உடல்களை கையாண்டிருக்கிறேன். மரத்தில் தொங்கி, பற்றைக்குள் பதுங்கி, மண்ணிற் புதைந்து, நீாில் மிதந்து, இதயம் நொறுங்கி, குடல்கள் கிழிந்து, அவையவங்கள் இழந்து தலைகள் சிதைந்து… அவைகளை தேடிக் கண்டுபிடித்து, பொலித்தீன் பக்கெட்டுக்குள் போட்டு, சிப்பால் மூடி…, ஒவ்வொரு குஞ்சுகளினதும் கடைசி ஆசைகளும,; கனவுகளும் எம்மாத்திரம். இந்த மணிக்கூட்டை தாத்தாட்ட கொடு, மோதிரத்தை அம்மாக்கிட்ட கொடு, இத அக்காட்ட.., மல்லிட்ட.., தண்ணி, தண்ணி. கடவுளே, கடவுளே, என்ர அம்மா.., என்ர அம்மே.. என்ர உம்மா. இந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன. என் மனம் இறுகிவிட்டது. வாழ்க்கை என்றால் என்ன ? மனிதம் என்றால் என்ன ?, ஏன் குஞ்சுகள் இறக்கின்றன ?. இவைகளெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் ‘ என்று ஒருமுறை என்னிடம் கூறினான்.

எனக்கும் குஞ்சுகள் பற்றிய காட்சிகள் படிமமாக விாியத் தொடங்கின. முதுகுப் பக்க ஒலிவ்பச்சைக் குஞ்சுகள் மேற்குப் புறத்தே அறுபத்து நான்கு ஒரு நாள் செத்துக் கிடந்தன. இன்னொரு நாள் தெற்கில் ஒலிவ்பச்சைக் குஞ்;சுகள் பதுங்கியிருந்து ட்ரெக்டாில் போன வெள்ளைக் குஞ்சுகளை புரட்டிவிட்டன. முப்பத்திரண்டு குஞ்சுகள் உடனே புரண்டு வயிற்றுப் பக்கத்தைக் காட்டியவாறு உயிரைவிட்டன. இன்னொரு நாள் ஒலிவ் குஞ்சுகளை கிழக்கில் வெள்ளைக் குஞ்சுகள் கட்டை போட்டு, பள்ளம் தோண்டி மறி;த்து அடித்து எழுபது பேர்களை முதுகுப் பக்கமாக புரட்டிவிட்டன. இதற்குப் பதிலடிகள் தொடர்ந்தன. மேற்கில் தொண்ணூற்றெட்டு வெள்ளைக் குஞ்சுகள் புரட்டிவிடப்பட்டன. இதற்காக ஒலிவ்பச்சைக் குஞ்சுகள், இரண்டு தரம் எழுபதாக புரண்டன. கணக்குகள்; பெருக்கல் விருத்தியி;ல் சென்றன. குஞ்சுகளின் இறப்புக்களும் பெருகிக் கொண்டேயிருந்தன. ஒரு தலைமுறைக் குஞ்சுகள் அழிய, புதிதாகப்பொாித்த குஞ்சுகள் களங்களுக்கு திசைப்படுத்தப்பட அவைகள் களங்களில் வாிந்து கட்டிக் கொண்டு நின்றன. சில குஞ்சுகள் தங்கள் ஆதிக்கப் புலத்திலிருந்து கம்பி நீட்டின. நண்பன் ஒருவன் சொல்கிறான் மத்திய கிழக்கு நாடொன்றின் பிரபலமான கொம்பனியொன்றில் தொழில் பூிந்து ஒரே அறையில் வசிப்பது, இப்படித் தப்பிக் கம்பி நீட்டிய ஒலிவ்பச்சைக் கடலாமைக் குஞ்சுகளும், வெள்ளைக் கடலாமைக் குஞ்சுகளும்தான். இடங்கள் மாற, ஆதிக்கப்புலங்கள் மாற, பகைமை மாறி, நண்பத்துவம் தொடர்கிறது.

காடுகள் தாண்டி, மலைகள் தாண்டி, ஆறு ஒன்று வளைந்து நெளிந்து ஒடி, அதற்கப்பால் மரம் வளாந்து சோலையாகி, ஓரு பொிய திட்டி இருக்க, அதிலே ஒரு அம்மனுக்கு ஓலையால் ஒரு கோயில், அதற்கொரு உற்சவ விழா. அடுத்த நாள் மழை பெய்யும். திருவிழா களைகட்டும். கடைகள் எழும்பும். எங்கணும் மகிழ்சியும், ஆரவாரமும் நடுக்காட்டை ஆரவாரப்படுத்தும். அந்தத் திட்டி, காடு, மலை எங்கும்; குஞ்சுகள் பூக்கும். தாய், தந்தையர் வருவர். வழிபடுவர். மூன்று கம்புகளை முக்கோணமாய் நிலத்தில் நாட்டி, பாற்சோறு பொங்கி படைத்து, குஞ்சுகளுடன் உண்டு களித்து மகிழ்வர். திடிரென ஒரு குஞ்சு தனது ஆயுதம் தோளிலிருந்து தரையில் இழுபட ஒரு விளையாட்டுத் துப்பாக்கியை காசு கொடுத்து வாங்கி வெடிக்க வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தது. அதன் அர்த்தம் என்னவென்று வினவினார் மாஸ்டர். உணர்வுக்கு ஒன்று. வயதுக்கு ஒன்று என்றேன். பொருத்தமான பதில் என்றார் மாஸ்ரா;. வீதியோரத்தில் ஐந்து ஆறுகளாய் நிற்கும் ஒலிவ்குஞ்சுகள் ஐஸ் பழங்கள் வாங்கிச் சாப்பிடும். சர்பத் சாப்பிடும். வாகனங்களில் வண்ண வண்ண படங்கள் போட்ட கலண்டர்கள் கேட்டு வாங்கி எடுத்து மகிழ்வுறும்.

மாஸ்டர் தொடர்ந்தார். “என்ர வகுப்பில முப்பத்தேழாவது பிள்ளையா வந்த பையன். ஆறு மாதமாக் காணல்ல. ஒரு நாள் வந்து எனக்கிட்டேயே கார்ல் மார்க்ஸ், மாஒசேதுங், லெனின், சேகுவரா, புரட்சி, தேசியம், விடுதலை பற்றியெல்லாம் கதைக்கிறாான். அவன் கதைச்ச விசயங்கள்ள நிறைய விசயங்கள் எனக்குத் தொியாது. விளங்கவும் இல்ல. இது எப்படிச் சாத்தியம்” என்று கேட்டார் மாஸ்டர். கவனக் கலைப்பான் இல்லாத வரை கவனம் என்பது உண்டு. கவனம் என்பது இருக்கின்ற வரை கற்றல் என்பது இலகு என்றேன். பதிலை ஆழ்ந்து உணர்ந்து மாஸ்டர் புன்னகை பூத்தார்.

சிறுவர்களின் தந்தையர்களைக் கொன்றார்கள்

தமையன்மாரை ஊாினின்று விரட்டினார்கள்

சிறுவர்கள் ஆயுதந் தாித்தபோது

மனிதாபிமானத்தின் முகத்தைச் சூடிச்

சிறுவர்கட்காக அழுதார்கள்.

என்று சிவசேகரம் ஞாபகத்திற்கு வந்தது

“கவனம்..” என்று சிவா கத்தினான். மேலும் ஒரு பொிய அலை படகை ஏறி இறங்கச் செய்தது. நான் சமனிலை தடுமாறி படகுக்குள்ளே விழப்பார்த்து ஒரு வகையாக சுதாாித்துக் கொண்டேன். சசியும் ஜெயபாலும் என்னைப் பார்த்துச் சிாித்தார்கள். சிவா இன்னும் கொஞ்சக் காலத்தில் நாடு வெறுத்து தனது மேற்கத்திய மனைவியுடன் நாட்டை விட்டு கிளம்பிவிடுவான். ஒரு தடவை சிவா என்னை படகில் கொண்டு சென்று கடலில் தூக்கியெறிந்து “நீ அமிழ்வேன் என்று நினைத்தால் அமிழ்வாய், மிதப்பேன் என்று நினைத்தால் மிதப்பாய்” என்று ஆங்கிலத்தில் கத்தினான். நான் மிதந்தேன். நின்றேன். முன்னால் நடந்தேன். பின்னால் நடந்தேன். பின் பல கிலோமீற்றர் தூரம் கயிற்றினால் படகின் உதவியுடன் கட்டியிழுக்கப்பட்டேன் (ற்றோவிங்). அடித்;தளப் புலக்காட்சி பெற்றேன். அத்தோடு அடித்தளப் பாிச்சயமும் பெற்றேன். மூளை சலவை செய்யப்பட்டது. கடற் பயம் போனது. இதுதான் வாழ்க்கையின் தத்துவமும் என பின்னால் தொிந்தது.

தான் ஆண்டாண்டு காலமாக குஞ்சுகள் சிதறிப் போகாத இடத்தை தோ;ந்தெடுத்து, முட்டையிட்டு, குஞ்சு பொாித்து, குஞ்சுகள் தன்னை அடைந்து, வாழ்வில் வளம் பெற்று வாழ முட்டையிட சென்ற அல்லது முட்டைகளை இட்டுவிட்டு வந்த கடலாமைத்தாய் மீனுக்கு கட்டிய வலையில் மாட்டுப்பட்டு அல்லது யாருக்கோ விாித்த வலையில் அகப்பட்டு, தன்னை விடுவிடுக்கும் முயற்சியில் வலையைப் பிய்த்துவிட்டது. அதனால் ஆத்திரம் கொண்ட வலைக்குச் சொந்தக்காரன் அல்லது வலை விாித்தவன் பொிய கத்தி கொண்டு ஆத்திரம் தீர கடலாமையின் அவையவங்களை வெட்டி, குருதி பெருக்கெடுக்கச் செய்து, கடலாமைத் தாயைக் கொன்று விட்டான். அவரவர் பிரச்சினை அவரவருக்கு. விாித்தவனுக்கு வலை பொிது. கடலாமைக்கு கடலாமைக் குஞ்சுகள் பொிது. ஆனால் இவைகளை ஆளும் இயற்கைக்கு எவை பொிது ? ஒரு குஞ்சினால் ஆயிரக்கணக்கான வலைகள் தரமுடியும். அவன் வெட்டினாலும் வெட்டாவிட்டாலும் இன்னொரு முறை இன்னொரு கடலாமைத்தாய் போகலாம் அல்லது போகாமலும் விடலாம். முட்டையிடுவதற்கு முன் வெட்டுப்பட்டால் நூற்று இருபது கடலாமைக் குஞ்சுகள் பாவம்.

போராளியின் முகத்தை அணிந்த சிறுவனும்

சிறுவனது முகத்தை அணிந்த போராளியும்

சந்தித்தபோது

முகங்களைப் பாிமாறிக்கொள்ள இயலவில்லை

நொறுங்கிய நிலைக்கண்ணாடியில் மாித்த சிறவனுக்காகப்

போராளி சிறுவனைப் போற் கதறினான்

என சிவசேகரத்தின் வாிகள் ஞாபகம் வர. உள்ளம் நொறுங்கி உயிர் சிதைந்து கண்ணீர் மல்கவைத்த வாிகள் இதுதானென ஏற்றம்பெற, கடல் கதறி அழுதது. பொங்கியது. புரண்டது. கண்ணீர்விட்டது. பொிய அலையொன்று எழுந்து எல்லோருமே என் மக்கள். நானே எல்லோரையும் சுமந்து வந்தேன். ஆனால் ஒரு தாயினின்றும் பிாிந்தீர்கள். கூட்டமானீர்கள்;. மதமானீர்கள். மொழியானீர்கள். கலாச்சாரமானீர்கள். இறுதியில் என்னையே சிவப்பாக்கினீர்கள். படகை வளைத்து சிவப்பு மயமாகவே இருந்தது.

கலக்கமடைந்த மனத்துடன் கயிற்றில் வட்டமான சுருக்குச் செய்து, வெளியே நீட்டிக் கொணடிருந்த கடலாமையின் தலையில் சுருக்கைப் போட்டு இறுக்க, அந்த இருநூறு கிலோ கடலாமையிலிருந்து கசிந்துகொண்டிருந்த இரத்தம் வழிநெடுக நீலக்கடலை இரத்தக்கடலாக்க கடல், அதனையும் படகையும் இழுத்துவரத் தொடங்கியது.

amrithaam@yahoo.com

Series Navigation

அம்ாிதா ஏயெம்

அம்ாிதா ஏயெம்