This entry is in the series 20030223_Issue

வசீகர் நாகராஜன்


காலைத் தேநீருடன் நேற்றைய கிரிக்கெட் வாசித்திட
துஙெ¢கி எழும் குட்டி தேவதையிடம் முத்தம் வாங்கிட
சமையலில் மூழ்கியிருக்கும் மனைவியை சீண்டிட
பேருந்தின் வியர்வையில் முழுவதும் நனைந்திட
பழைய பள்ளி நண்பன் வழியில் சந்தித்திட
காகிதங்களிடையே அலுவலகப் பணி தொடர்ந்திட
வட்டமாய் அமர்ந்து அரட்டையுடன் சாப்பிட
அடுத்த மாத திருப்பதி பயணத்திற்கு திட்டமிட
மளிகைக்கடை பாக்கி நினைவில் உறுத்திட
மாலை திடார் மழை இடியுடன் முழங்கிட

இயல்பும் இனிமையும்
கசப்பும் சண்டையுமாய்
ஆச்சரியமும் ஏமாற்றமாய்
ஓர் நாள் கழிந்திட

புதிதாய் பல ஆச்சரியங்களுடன்
காக்க வைக்கிறது நாளைய பொழுது

***
VNagarajan@us.imshealth.com

Series Navigation