ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

என் எஸ் நடேசன்


‘ ‘ெஐனற், உனது தாயார் இந்த ஓய்வு இல்லத்திற்கு இடம் பெயர்ந்து வந்தபோது உனது மனநிலை எப்படி இருந்தது ‘ ‘ ?

‘ ‘எனது மனத்தில் ஓர் ஆறுதல் உணர்வு ஏற்பட்டது. நான் வேலையில் இருந்து களைப்பாக வீடுவந்ததும் அம்மாவிடம் பேசவேண்டும். நாள் முழுவதும் தனியே இருந்த அம்மா நான் வந்ததும் என்னுடன் பேசுவதற்கு வருவார். நான் மனமும் உடலும் களைத்த நிலையில் சாவகாசமாக உரையாட முடியாது, நான் வந்தவுடன் எனக்காக அம்மா கஸ்டப்பட்டு சமைக்க வேண்டும். தான் உண்ணாவிடிலும் கூட, ஒரேவீட்டில் வாழும்போது இப்படியான எதிர்பார்ப்புகள் உண்டு. இதில் இருந்து பரஸ்பரம் விடுதலை பெறுவதற்கு இந்த ஓய்வு இல்லம் உதவுகிறது, வாரத்தில் ஒருநாள் நான் அம்மாவுடன் இரவு தங்குவேன்.

என்னோடு வேலை செய்த ெஐனற்ன் அம்மா தனது வசதியான பெரிய வீட்டை விற்றுவிட்டு ரிற்றயமண்ட் வில்லேக எனப்படும் ஓய்வு இல்லத்தில் வீடு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாாள் என அறிந்து இருவரையும் சந்திக்க ஓய்வு இல்லத்துக்கு சென்றேன்.

மருத்துவ நுட்பத்தாலும் புதிய மருந்துகளாலும் மனிதர்களில் வாழ்வுக்காலம், முன்னேறிய நாடுகளில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் கூடியுள்ளது, வாழும்காலம் கூடும்போது முக்கியமாக மூன்று தலைமுறையினர் வாழும்போது இவர்களது உடற்சக்தி, மனசிந்தனை மற்றும் தேவைகள் வேறுபடுகிறது, வேறுபட்ட தேவைகள் உள்ளவர்கள் ஓரிடத்தில் இருக்க முடியாது. ரீன் ஏஜ் (teen age) வயதுடையவர்களின் தேவைகள் அவர்களின் பெற்றோர்களின் தேவைகளில் இருந்து வேறுபடுகிறது. இதேபோல் அறுபது வயதுக்கு மேற்பட்டோர் மாடிவீடுகளிலும் வசிப்பதற்கு ஏற்பாகாது.

இந்தவகையில் உடல்நலம் குறைந்து பராமரிப்பு தேவைபடும் வரை அவர்கள் ஒத்த வயதானவர்களுடன் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்த ரிட்டயமன்ற் வில்லேக. ஆசிய நாடுகளில் இந்த முறை பெருமளவில் இன்னும் வரவில்லை. வெகுவிரைவில் இந்தியா சீனா போன்ற இடங்களில் பெரும் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

மெல்பேனில் வடபகுதியில் போக்னர் என்ற இடத்தில் நான் சென்ற இந்த ஓய்வில்லம் இருக்கிறது, இயற்கையின் தன்மையை நினைவுபடுத்தும் முகமாக அருகில் நேர்சிங்கோமும் முன்புறமாக போக்னா மயானமும் அமைந்துள்ளது,

மெல்போனின் குளிர்கால மாலைவேளையில் நான் சென்றபோது வாசலில் ெஐனற் என்னை எதிர்கொண்டார். உள்ளே சென்றபோது இருநுாற்றுக்கு மேற்பட்ட சிறிய வீடுகளைக் கொண்ட சிறிய கிராமம். சுத்தமான தெருக்களும், அளந்து வெட்டப்பட்ட புல்தரைகளும் கவர்ச்சியாக இருந்தது,

‘ெஐனற், ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறது ? ‘

‘இன்று ஞாயிற்றுக்கிழமை. பிள்ளைகள் வந்து தாய்தந்தையரை தங்களது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். இரவானதும் மீண்டும் கூட்டிவருவார்கள. ‘

ெஐனட்டின் தாயார் ெஐஸ் இருந்த மூலை வீட்டுக்குள் சென்றபோது அவர் என்னைக் கட்டி அனைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார்.

.

நானும் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டேன். ‘ ‘இரண்டு கன்னத்திலும் முத்தமிடுவது இத்தாலியர்கள்தான் எனக் கூறிச் சிரித்தார்.

.

‘அப்படியா எனக்குப் பல கிரேக்க, இத்தாலிய மோல்ரிய நண்பர்கள் இருந்ததால் இந்தப் பழக்கம் வந்தது என்றேன். ‘

கால் நுாற்றாண்டுக்கு முன் ெஐஸ் தனது கணவர் குழந்தைகளுடன் இங்கிலாந்தின் ேஐாக்சயர் பகுதியில் இருந்து வந்தாள். ேஐாக்சயர் ஆங்கில உச்சரிப்பு இன்னமும் ெஐஸ்சிடம் மட்டுமல்ல ெஐனட்டிடமும் உள்ளது,

மருத்துவ தாதியாக மெல்பேனில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது கணவன் இறந்ததால் தனது வேலையை நிறுத்திவிட்டு குழந்தைகளை வளர்த்தாள். அவர்கள் வளர்ந்தது மீண்டும் பெண் மருத்துவ தாதியானாள். இவர்களது பெரிய வீடு கிளன்ரோய் பகுதியில் இருந்தது.

‘ ‘ெஐஸ், எப்படி இந்த வீடு கிடைத்தது ‘ ‘ என்றேன்.

‘ ‘ஒன்பது மாதங்கள் காத்திருந்து கிடைத்தது, என்றார். வீட்டைச் சுற்றிப் பார்த்தேன்.

ஒரு படுக்கை அறையுடன் அத்தோடு குளியல் அறை, குளியல் அறையில் கைபிடி இருப்புகள். வழுக்காத தரையமைப்பு. வீட்டில் ஒவ்வொரு பகுதியிலும் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது, தீ அணைக்கும் கருவி பொருத்தப்பட்ட சிறிய சமையலறை.

மீண்டும் ெஐஸ்சிடம் ‘ ‘இந்த வீடு கிடைக்க என்ன தகுதி வேண்டும் ‘ ‘ என்றபோது ‘ ‘ஜம்பத்தைந்து வயது இருக்க வேண்டும். ‘ ‘ என்றார்.

பொதுவான வசதிகளை எனக்குக் காட்டுவதற்கு தாயும் மகளும் என்னுடன் வந்தனர். நீச்சல்குளம், நுால்நிலையம், பிலியட்மேசை, டாடா ‘ ற்கான இடம். இதைவிட சிறிய நாடக அரங்கு இருந்தது,

இந்த நாடக அரங்கு ஏன் ? என்றேன். ‘இங்கு பல நடிகர்கள் இருக்கிறார்கள். தாங்களாகவே நாடகம் போடுவார்கள். இதைவிட போல்ரூம் நடனத்திற்கு சங்கீது அரங்காகவும் பயன்படும். ‘ ‘

இவ்வளவு வசதிகள் உள்ளதே. இந்த இடத்தை பற்றி ஏதாவது குறை சொல்லமுடியுமா ‘ ‘ என்றேன்.

‘ ‘இந்த இடத்தைப் பராமரிக்க எமது பென்சனில் இருந்து பணம் அறவிடுகிறார்கள். மிகுதியாக எதுவும் மிஞ்சுவதில்லை. ‘ ‘

வீடுகளின் பின்பகுதியில் வெளியான இடத்தில் சிலபகுதிகளில் காய்கறி செடிகள் இருந்தன. இதைப்பற்றி கேட்டபோது, ‘ ‘தோட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் இந்தபகுதியயை உபயோகிப்பார்கள். ‘ ‘ என பதில் வந்தது,

ெஐஸ் தனது தோழியான பிலிஸன் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள். பிலிஸ். கடந்த பன்னிரண்டு வருடங்களாக இந்தவீட்டில் வசிக்கிறார். ‘ ‘கடந்த வருடம் கணவன் இறந்ததால் தனது மனம் தவித்தாலும் இந்த கிராமத்தில் இருக்கும் மற்றையோரின் துணையால் ஆறுதல் அடைகிறேன். ‘ ‘ என்றாள். ‘ ‘உங்கள் பிள்ளைகளிடம் போவதில்லையா ? ‘ ‘ என கேட்டபோது ‘ ‘எனக்கு எட்டு பிள்ளைகளும் பதினெட்டு பேரப்பிள்ளைகளும் உள்ளார்கள். ‘ ‘ என பெருமிதமாக கூறியபடி அவர்களின் போட்டோ அல்பத்தை எனக்கு காட்டினார்.

பலர் குழந்தைகளுடன் சிறிய வீட்டில் வசித்த பின் ஜம்பது, அறுபது வயதின் முன்பு மாடிவீடு கட்டுவார்கள். அக்காலத்தில் முள்ளந்தண்டு நோ. இடுப்பு வலி, என்பன கணவனுக்கோ மனைவிக்கோ வந்துவடே¢டால் வீட்டைச் சீராக வைத்திருக்க முடியாது. ஓருவர் மாடிவீடு கட்டிவிட்டு முதுகு நோய் காரணமாக மாடிப்படிக்கு பக்கத்திலே இருக்கிறார்.

ெஐனட்டிடமும் ெஐஸ்சிடமும் விடைபெற்று வெளியே வந்தபோது மயானமும் நேசிங்கோமும் தெரிந்தது, இந்தப் பகுதியை நிர்மானித்த ரவுண் பிளானரை ( Town Planning) உண்மையாகவே வாழ்த்தினேன்.

—-

nadesan@ihug.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்