தமிழவன் கட்டுரை பற்றி…
பி.கே. சிவகுமார்

சென்ற வார திண்ணையில் ‘புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும் ‘
என்ற தலைப்பில் தமிழவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். அக்கட்டுரையின்
நிறைவில் – ‘இதனாலேயே இப்புது அலை தமிழ்ப் பற்று, தமிழகத்தின்
காங்கிரஸ், கம்யுனிஸ்ட், பா.ஜ.க போன்ற கட்சிகளின் தமிழ்ப் பற்றற்ற
குணத்துக்கு எதிரானது. ‘ என்று தமிழவன் குறிப்பிடுகிறார்.
தமிழகத்தின் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க கட்சிகளின் தமிழ்ப்
பற்றற்ற குணமென்று எவற்றைக் கருதுகிறார் என்பதை அவர் மேற்கொண்டு
(முடிந்தால், உதாரணங்கள் மற்றும் நிகழ்வுகளுடன்) விளக்க வேண்டுகிறேன்.
அன்புடன்,
பி.கே. சிவகுமார்
pksivakumar@yahoo.com