ஓம் ஸாந்தி

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

ப.மதியழகன்மழை பொழிந்தது
பயிர் தளைத்தது
முப்போகம் விளைந்தது
உயிர் தழைத்தது
உள்ளம் இனித்தது
மனம் மகிழ்ந்தது
மாதவம் புரிந்தது
நினைவு ஆழ்ந்தலயிப்பில்
மூழ்கியது
ஞாபகங்கள் உள்ளத்தை
மீட்டவே செய்தது
வீணை நரம்பினைப் போல்
உள்ளம் பாடல் பாடி களித்தது
தேகம் முழுவதும் திருநீறு பூசி
ஆடிப்பூரத்துக்கு தங்கத்தேர் இழுத்தபிறகு
குடும்பத்தினரின் வேண்டுதல் முடிந்தது
லயம் தவறிய குரலாக
ஆத்மா மட்டும்
எதற்கும் சாந்தியடையாமல்
கொதித்தடங்கியபடியே இருந்தது.

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்