ஒரு நட்பின் முறிவு

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

ஆதர்ஷ் ராவ்


உனக்கும் எனக்கும் இனி சரிப்படாது
கோர்த்த கைகளைப் பிரித்து விடுவோம்

நீயும் நானும் அவரவர் பாதைகளில்
வெகுதூரம் சென்றுவிட்டோம் மீளமுடியாதினி

உனக்கும் எனக்கும் பிணக்குகள் இல்லை..
பிணைவுக்கான சாத்தியங்களும் இல்லையே ?

சற்றும் ஈடுபாடின்றி நான் பேசுவதை
நீயும் நீ சொல்வதை நானும் கேட்கிறோம்

உன்னை நானும் என்னை நீயும்
சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன ?

நம் நட்புக்கு பயன்பாட்டைத் தாண்டிய
உயிர் கொடுப்பதில் பயன் என்ன ?

சந்தர்ப்பங்கள் மாறும்போது சுற்றங்களும்
மாறுவதுதானே உலக இயல்பு ?

எனக்கு நல்ல நட்பு அமைய உன் வாழ்த்தும்
உனக்கு என்னுடையதும் எப்போதும் உண்டு!

itsaadharsh@hotmail.com

Series Navigation