ஒரிஸ்ஸா – மச்சா தர்காரி (காய்கறி மீன் குழம்பு)

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ மீன்

4 பெரிய வெங்காயங்கள்

2 பெரிய உருளைக்கிழங்குகள்

1 பெரிய தக்காளி

2-3 கறி இலைகள் (பே லீவ்ஸ்)

2 தேக்கரண்டி ஜீரகத் தூள்

3 சிறு துண்டுகள் இஞ்சி, 10-12 பூண்டு பற்கள் ( அல்லது 2 மேஜைக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது)

2-3 சிவப்பு மிளகாய்

உப்பு மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

பூண்டு, இஞ்சி யோடு 3 வெங்காயத்தையும் சிவப்பு மிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

மீனை சுத்தம் செய்து, உப்பு மஞ்சள் தூள் போட்டு தேய்க்கவும்

மேலாக எண்ணெய் ஊற்றி எல்லா பக்கவும் வேகும் படி வறுக்கவும் மூன்று அல்லது 4 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடவும்.

மீதமிருக்கும் வெங்காயத்தை தூளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை விரல்கள் போல நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை தூளாக நறுக்கிக் கொள்ளவும்

எண்ணெயை வாணலியில் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கறி இலைகளையும் ஜீரகத்தையும் போட்டு சற்று வதக்கிவிட்டு, அத்துடன் வெங்காய விழுதைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இத்துடன் தக்காளி போட்டு, குழகுழப்பாகும் வரை வதக்கவும்.

இத்துடன் உருளைக்கிழங்கு விரல்களைப் போட்டு 2-3 நிமிடங்கள் அதிகத்தீயில் பிரட்டவும்.

கால் கோப்பை தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேகவிடவும்

உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், மீனைப் போடவும். தண்ணீர் வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளுங்கள்

மெதுவான தீயில் 15 நிமிடங்கள் நன்றாக வேகும்வரை வேகவிடவும்

இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்

**

நேரம் 45 நிமிடங்கள்

அளவு : 4 பேர்

****

Series Navigation

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை