ஒன்னெ ஒன்னு

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

அசோக்


டேய் மகி ஒன்னு குடுடா.

அதான் முன்னாடியே சொன்னேன்ல… அவ்வளவுதான்.

டேய் ஒன்னெ ஒன்னுடா…

சொன்னா சொன்னதுதான்.

சரி நானாவது உனக்கு கொடுகறேன்டா ?

… … …

டேய் சொல்லுடா… கொடுக்கடுமா ?

அய்யோ… கடவுளே… ஹால்ல எல்லோரும் இருக்காங்க.

அவங்க இருந்தா இருந்துட்டு போகடும்டா… ப்ச்ச்.. டேய்… உன்ன கேக்காம கொடுத்துடேன்டா.

… … …

டேய் இன்னொன்னு கொடுக்கடுமா ?

உங்களூக்கு கொஞ்சங்கூட அசிங்கமா இல்லையா ?

ப்ச்ச்…

அய்ய்யோ… உங்களூக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு.

டேய் மகி…

உம்.

இன்னகி ராத்திரி உன் பக்கதுல படுத்துகறேன்டா ?

ஒன்னும் வேண்டாம்.

டேய் ப்ளீஸ்டா… நா ஒன்னும் பண்ணமாட்டேன்டா..

வே…ண்டாம் சிவா என் பக்கத்துல படுத்துனுருப்பான்.

டேய் அவன் தூங்கும் போது ஒரமா படுகபோட்டுரேன்டா… இன்னகி உன் பக்கதுல படுத்துகறேன் யென்ன ?

முடிஞ்சா படுத்துகோங்க.

டேய் இன்னகி ப்ளு கலர் டிரெசா போட்டுகிட்டு இருகே ?

இல்ல.

வேற இன்னடா ?

அது எதுக்கு உங்களுக்கு ?

சும்மா சொல்லுடா.

ஒய்லட் கலர்.

ச்சே ஜஸ்டூ மிஸ்ஸுடா… … சரி… இன்னகி உன் மேல கை போட்டுகடுமா ?

வேற… வேற எதுனா பேசுங்க.

வேறயெதுனாவா ?… திட்ட கூடாது… உன்..

‘you have… 1 minute remaining ‘

டேய் phone cardல இன்னும் ஒரு நிமிசம்தான்டா இருக்கு..

அப்பாடி தப்பிசேன்.

டேய் நீ உன் உடம்ப பாத்துகோ,uncle,aunty எல்லோரையும் கேட்டதா சொல்லு,வேலூர்கு phone பண்ணி அப்பா,அம்மா கிட்ட பேசு,நான் நம்ம கல்யாண நாள் அன்னிகி திரும்பவும் phone பண்ணரேன்டா.

உம் சரி…அப்பறம் … usல இருந்து இப்படி அடிக்கடி பேசுனா ரொம்ப செலவாகும் இல்ல,வாரம் ஒருமுறை பண்ணா போதாதான்னு எங்கம்மா சொல்லறாங்க.

ஹா ஹா.. அதவுடுடா …நீ உன் உடம்ப பாத்துகோ,phone கட்டாக போகு…

டொக்.

———————————–

Series Navigation

அசோக்

அசோக்