ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….
கவிதா நோர்வே

ஈழத்திலிருந்து எழுதுகிறேன்…
தனிநாடு கேட்கிறார்களா
எம் புதல்வர்கள்
எம் புதல்வர்களைக் கேட்கிறதா
தாய்நாடு
விபரமறிந்தவர் யாரேனும்
சொல்லுங்களேன்
வெறுமையாய் கழியும்
கணப்பபொழுதுகளில்
என்னோடு பேசிக் கொண்டு நானும்
அடையாளப்படுத்த முடியாத
என் சப்தங்களை
என்ன செய்ய
வீட்டிற்கொரு பிள்ளையென்று
முத்தவனும்…
கவிந்த இருள் கலையுமென்று…
இளையவனும்;
காலை எழுந்ததும் விடியுமென்று
பிரியமானவரும் போனபின்னே
எனக்குக் கடைசியாய்
இன்னும்
ஒரு குட்டி மகன்
இருக்கிறான்!
கவிதா நோர்வே
01.04.09
kavithai1@hotmail.com