This entry is in the series 20020317_Issue

எஸ். வைதேஹி.


என் பிரச்சனை அப்படியொன்றும் பெரிதல்ல…!
ஆனாலும் கூட என்னுடன் வந்துகொண்டேயிருக்கிறது..
உன்னுடன் பேசும்போதும்
எதிரில் சிரிக்கும்போதும்
பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் போதும் கூட…
என்னை ஒன்றும் செய்யாமல்,
அமைதியாக
என் மனதின்
சின்ன மூலையில்
அமர்ந்து கொண்டு..
மழைக்கால எருமை முதுகின்
காக்கையைப் போல!

Series Navigation