This entry is in the series 20090806_Issue

வி பிச்சுமணி


மறியல் செய்யும்
மாற்று கட்சியினரை
காலையில் கைது செய்து
மாலையில் விடுவிப்பது போல்
பரிதியை பகல் எல்லாம்
பிடித்து வைத்து கொண்டு
மாலையில் விடுவித்தது
மழை மேக மூட்டம்

வானம் வெள்ளைஒளி
லிட்மஸ் தாளை
மழையில் முக்கியது
கிழக்கே அது வானவில்லானது
நிலா வானவில்லை
வண்ண பென்சில் பெட்டிஎன மருவி
வண்ணம் கேட்டு அழுதது
அதன் கண்ணீரில் கடல் உருவாயிற்று

ஞாயிறு சிவப்பு வண்ணம்
எடுத்து கொண்டு
மஞ்சள் வண்ணத்தை
நிலவுக்கு கொடுத்தது
சிதறிய சிவப்பு வண்ணங்கள்
செல்போன் கோபுர சிவப்பு விளக்கானது
சிதறிய மஞ்சள் வண்ணங்கள்
தெருவெங்கும் சோடியம் விளக்கானது

மஞ்சள் முழுநிலா
நட்சத்திர கூட்டத்தில் வருவது
மின்மின்மினி பூச்சி அலையும்
ஒற்றை அடி பாதையில்
என் காதலி வருவது போல்
மகிழ்ச்சி உருவாக்கியது

v.pitchumani@gmail.com

Series Navigation