என்னை மட்டும்.. ..

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

சித. அருணாசலம்


என்னை மட்டும்.. ..

தன்மீது பதியவேண்டும்

என்று ஏங்கிடும் புல்தரை,

உன் பாதம் பார்த்து.

மலரை இழந்தாலும்

மகிழ்ந்திருக்கும் ரோஜாச்செடி,

உன் ஸ்பரிசத்திற்காக.

ஆடையாகி உன்னை

அணைக்க வேண்டும் என்று

துடித்துப் போய் சீக்கிரத்தில்

வெடித்து நிற்கும் பருத்தி.

முத்தும் பவளமும்

முந்திக் கொள்ளும்

உன் கழுத்தில் மாலையாக.

அ·றிணைகளின்

ஆசைகளை எல்லாம்

நிறைவேற்றுகிறவளே!

நிராகரித்து என்னை மட்டும்

நிர்க்கதியாக்குவதேன்?

=சித. அருணாசலம்.

Series Navigation

சித. அருணாசலம்

சித. அருணாசலம்