எது சரி ?
Published June 26, 2003 • By
புகாரி
புகாரி, கனடா

இந்தக் கோபம் எனக்குப்
பாதுகாவலனா
பகைவனா ?
இந்த ஞானம் எனக்கு
விடுதலையா
தண்டனையா ?
இந்த மனசு எனக்குச்
சிறகா
சிறையா ?
இந்த ரசனை எனக்கு
லாபமா
நஷ்டமா ?
இந்தப் பிறப்பு எனக்கு
பாக்கியமா
சாபமா ?
இந்த மோகம் எனக்கு
விருந்தா
விசமா ?
இந்தப் பசி எனக்கு
உயிரா
மரணமா ?
*
புகாரி, கனடா
buhari2000@rogers.com