எங்கள் தாயே

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

பவளமணி பிரகாசம்


கண்ணீர் சொரியும் வானமே!
கனம் குறைந்த கவலையா ?
கருமை கொண்டாய் முகத்திலே
அருமை தெரியா பேதையே!
ஆதவன் பிரிவில் ஏக்கமா ?
அதுதான் உனது துக்கமா ?
வருவான் விரைவில் வருந்தாதே
தருவான் கடல்நீரை தானமாய்
திருப்பிக்கொடு அதை தரணிக்கு
தயை மிகுந்த எங்கள் தாயே!

—-
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்