This entry is in the series 20040715_Issue

ஸ்ரீமங்கை


ஏதோவொரு உறுத்தல்..
இம்மழை முன்பே
பரியச்சமானதென.
எதிர்பாராதே சரிந்து
சாரலாய் ஈரித்து,
மங்கலாய் மூக்குக்கண்ணடியில்
ஈரப்படலமிட்டு,
பிடரியினின்று
வழிந்து உள் நனைத்து
கனப்பது,
மிகப் பரியச்சமானதாய
அதீத அவஸ்தை..

அன்று நாம் முடிவாய்ப் பிரிந்தபோது
எல்லாம் கனத்ததுபோலவே…

ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com

Series Navigation