உலக வர்த்தக அமைப்பு விதிகளும் இந்திய விவசாயமும்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

எல் எஸ் என் பிரசாத்


உலக வர்த்தக அமைப்பின் சில ஷரத்துகள் வளரும் நாடுகளுக்குச் சாதகமானவை.

உலக வர்த்தக அமைப்பை எதிர்த்து, அரசியல் வாதிகளும் அறிவு ஜீவிகளும், ஊடகங்களும் சில எதிர்மறை ஷரத்துகளை மட்டுமே கூறிவருகின்றனர். அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளும் இதை எதிர்த்ததும் உண்டு. ஆனால் தாம் நினைத்ததை ஓரளவு அவர்கள் நிறைவேற்றிக் கொண்டனர். உலக வர்த்தக அமைப்பில் வஅரும் நாடுகளுக்குச் சாதகமான அம்சங்கள் இவை:

விதி 11 : உறுப்பினர்கள் மீது என்ன அளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்பது பற்றிய தடைகள் நீக்கம்.

விதி 12: வரவு செலவுத்திட்டத்தில் இறக்குமதி குறைவாய் உள்ள நாடுகளுக்கு பாதுகாப்பு.

விதி 16 : மானிலங்களின் மானியங்கள்

விதி 19 : சில அவசர நிலை காரணமாக சில பொருட்களை பெருமளவில் இறக்குமதி செய்ய அனுமதி.

விதி 24 : இறக்குமதி வரிகளின் சுங்கவரிகளின் மீதான குறைப்பு. சுதந்திர வர்த்தகத்திற்கு வசதி.

விதி 27 : சுங்கவரிக் குறைப்பிற்கான கால அளவைகள்.

விதி 36 : வர்த்தக வளர்ச்சி

ந்த விதிகள் ஒரு உறுப்பினர் இன்னொரு உறுப்பினரைச் சுரண்டுவதைத் தடுக்க வழி கோலுகின்றன. சுங்க வரிகளின் மீதான பொஇது ஒப்பந்தம் (GATT) போலில்லாமல், விவசாயப் பொருட்களும் இதின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் மானியம் அளிப்பதைத் தடுக்க இது பயன்பட்டது. உருகுவே மாநாடு நம் நாட்டில் மானியங்கள் வழங்குவதைத் தடை செய்தது என்ற தவறான எண்ணம் உருவாகியுள்ளது. அதில்லாமல் இதனால் தான் உணவு தானிய உற்பத்தி பின்னடைவு பெற்று, பணப் பயிர்கள் முன்னுக்கு வந்ததென தவறாக எண்ணுகிறார்கள்.

விவசாய மானியங்கள்

விவசாயம் பற்றிய ஒப்பந்தம் காரணமாக மற்ற நாடுகளிடமிருந்து இந்தியா தனிமைப்பட்டு இயங்க முடியாது. இந்த ஒப்பந்தம் சில பொது ஷரத்துகளை விதிக்கிறது. பல வளர்ந்த நாடுகள் விவசாயத்திற்கு பெரும் மானியங்களை அளிக்கின்றன. ஆனால் அங்கே விவசாயத்தை நம்பியிருப்பவர்கள் பத்து சதவீதத்திற்கும் கீழ் தான். கீழே உள்ள அட்டவணை, மானியங்களின் அளவையும் விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் தொகை சதவீதத்தையும் அளித்துள்ளோம்.

இந்தியா விவசாயத்திற்கு 2.33 % தான் மானியம் அளிக்கிறது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே. மொத்த மானிய அளவு ( Aggregate Measure of Support) விவசாயத்திற்கு 10 சதவீதமாகும். வளர்ந்த நாடுகளின் சதவீதம் 5 எனலாம். ஆனால் வளர்ந்த நாடுகள் மொத்தம் மானியம் அளிப்பது 150 பில்லியன் டாலர்கள். வளரும் நாடுகள் அளிக்கும் மானியம் 19 பில்லியன் தான். மொத்த மானிய அளவு 10 சதவீதத்திற்கு மேல் என்றால், 2004-க்குள்ளாக இதை 13 சதவீதமாய்க் குறைக்க வேண்டும் என்பது ஒரு விதி. உலக வர்த்தக அமைப்பின் கணக்கீட்டின்படி பொருட்களின் மீதான மொத்த மானியம் 7.5 சதவீதம் . பொருட்கள் அல்லாதவற்றின் மோது -38.5. இதனால் விதிகளை ஏற்றுக் கொள்வதால் இந்தியாவில் மானியங்கள் குறைய வழி இல்லை.

விவசாயத்திற்கு மானியம்

நாடு ஒரு ஹெக்டேருக்கு மானிய சதவீதம் விவசாயிகள் %

சராசரி மானியம்

அமெரிக்கா 32 டாலர். 36% 5%

ஜப்பான் 35 டாலர் 72% 4%

சீனா 30 டாலர் 34% 24%

தென் ஆப்ரிகா 24 டாலர் 60.67% 18%

இந்தியா 14 டாலர் 2.33 % 60%

(உலக வர்த்தக அமைப்பின் அறிக்கையிலிருந்து)

சுங்க வரிகள் : விவசாயப் பொருட்களின் மீது வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. 686 பொருட்களின் மீதான வரி குறையும். விவசாயப் பொருட்களின் மீது சராசரி வரி 115% ஆக இருந்தது. ஒப்பந்தத்தின் பின் 35% சதவீதமாய்க் குறைக்கப் பட்டுள்ளது. இந்த 686 பொருட்களைத் தவிர இன்னும் 587 பொருட்கள் மீது விதிக்க அனுமதித்த வரியைக் காட்டிலும் 50% குறைந்துள்ளது. 10பொருட்களின் மோது தான் வரி சற்று உயர்ந்துள்ளது.

பால்பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா 20 வருடங்களுக்கு முன்பே ஒப்புக் கொண்டு இறக்குமதி வரிகளையும் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. சமையல் எண்ணெய் மீது 150 சதவீத வரிக்கு அனுமதி இருப்பினும் இப்போது வரி பூஜ்மே. இதனால், பல எண்ணெய் மில்கள் மூடப்பட்டுவிட்டன. நிலக்கடலை விவசாயிகள் குறைந்தபட்ச விலையைக் கூடப் பெற முடியவில்லை. தானியங்களும் ‘ திறந்த அனுமதியில் ‘ (Open General Licence) வரியே இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டன. 1999-ல் இந்திய அரசு இந்த முறையை ரத்து செய்ய முயன்றது, ஆனால் உலக நாடுகள் ஒப்புக் கொள்ளவில்லை.

முதலீடு : ஒரு சவால்

இந்திய விவசாயம், பெரும் உற்பத்திக்கு பெரும் முதலீட்டைக் கோரி நிற்கிறது. உறப்த்தி செலவுகள் இதனால் குறையக் கூடும் . ஆனால் இது வேறு ஒரு பிரசினையை உருவாக்கும். விவசாயத்தை நம்பிய பெருமளவிலான மக்களை வேலை இஇழக்கச் செய்துவிடும். உலக வர்த்தக அமைப்பை விமர்சிப்பதற்குப் பதிலாக ஒரு மாற்று வழியை நாம் சிந்திக்க வேண்டும். விவசாயத்தைத் தொழில் மயமாக்குவது சமூக நீதிக்கு விரோதமானது. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்வது, நிலங்கள் இன்னமும் துண்டுபடவும் வழி வகுக்கும். உறப்த்தி குறையும்.

காப்புரிமை முறைகள் : வேம்பு, மஞ்சள் பாஸ்மதி அரிசி போன்றவற்றைக் காப்புரிமைக்குக் கீழ் கொண்டு வர அமெரிக்க கம்பெனிகள் முயலுகின்றன. இவை இந்தியாவில் தினசரி பயன் படும் பொருட்கள். ஆயுர்வேதம் காலங்காலமாய் வரும் ஒரு மருத்துவமுறை. இந்தியக் கம்பெனிகள் முன்வந்து மூலிகை மருந்துகளுக்கு பெருமளவிற்குக் காப்புரிமை பெற வேண்ரும். உலக வர்த்தக அமைப்புடன் போராடி இதற்குத் தீர்வு காண வேண்டும். ஜெனிவாவில் உள்ள ‘பிரசினைத் தீர்வு மையத்தில் ‘ இது கொண்டுசெல்லப் படவேண்டும்.

இந்தியக் கடல்களில் வெளிநாட்டார் மீன்பிடிப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை ஒப்புக் கொண்டதால் விளைந்த இன்னொரு ஆபத்து. இந்தியா இறால் போன்ற மீன்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கணிசமான அன்னியச் செலாவணி இ ஈட்டுகிறது. 10 லட்சம் பேரின் வாழ்க்கை இதை நம்பியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பு மீன்வளத்தை வற்றச் செய்வது மட்டுமின்றி ,

முடிவுரை

இந்தியா விவசாய உற்பத்தியில் திறன் கொண்ட நாடு தான். விவசாயத்தினால இபம்பெயர்ந்த மக்களை எப்படி வேலையில் அமர்த்துவது என்பது தான், இந்தியாவின் பிரசினை. உலகச் சட்டத்தைத் தவறென்று சொல்லிவிட்டு, கை கட்டிக் கொண்டு நிற்காமல், அந்தச் சட்டங்களை எப்படி இந்தியாவின் நலனிற்குப் பயன்படுத்துவது என்று நாம் கவனம் செலுத்த வேண்டும். பிரசினைகள் உள்ள பகுதிகள் இவை: காப்புரிமை பற்றிய இன்றைய ஒப்பந்தங்கள், பெருமளவில் பொருட்களைக் குவிப்பதற்கு எதிரான வரி விதிப்புகள் (Anti-dumping duties) மானியங்கள், வர்த்தகத்தில் துணிகளின் இடம் ஆகும். இவற்றில் இந்தியா முன் வந்து வளரும் நாடுகளுக்காகப் போராடவேண்டும்.

இந்தியா தற்போதிருக்கும் மானியங்களை இஇரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்தாலும் உலகச் சட்டத்திற்குப் புறம்பானதாய் இருக்காது.

மருந்துக்கான மூலிகைகளுக்குக் காப்புரிமை பெறுவதற்கு முன்வந்து செயல்பட வேண்டும்.

விவசாயிகளின் உரிமைக்காகப் போராடுவது

வெளிநாட்டினர் நம் கடலோரங்களில் மீன்பிடிக்காதபடி பாதுகாப்பது. ஆழக்கடலில் மீன் பிடிக்க தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்வது.

உலக வர்த்தக அமைப்பின் சட்ட அமைப்பின் கீழ் ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுவதைத் தடுக்குமாறி அமைப்பின் விதிகளைப் பயன்படுத்துவது.

(டாக்டர் எல் எஸ் என் பிரசாத் குண்டூர் கல்லூரியில் பொருளாதாரப் பேராசியர். இஇந்திய தாராளவாதிகள் குழுவின் செயலாளர்.)

Series Navigation

எல் எஸ் என் பிரசாத்

எல் எஸ் என் பிரசாத்