உலக வங்கி அறிக்கை : ஆப்பிரிக்க ஏழ்மை 82 சதவீதம் அதிகரிக்கும்

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ராம்போலோ மோல்ஃப்ஹே


சஹாராவைச் சார்ந்த ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் தீவிர ஏழ்மை இன்னும் 82 மில்லியன் அதிகரிக்கும் என்று இந்த வருடத்தின் உலக வங்கி அறிக்கை கூறுகிறது

ஆப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் கண்டம் முழுமையுமாக வீழும் என்றும் தீவிர ஏழ்மை 1990இன் 47.4 சதவீதத்திலிருந்து 1999இல் 49 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பல நாடுகளில் பலர் ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாகவே வாழ முடியுமென்றாலும் மத்திய வருமான நாடுகளில் ஒரு நாளைக்கு 2 அமெரிக்க டாலர் சம்பாதிப்பதுகூட தீவிர வறுமையைக் காட்டும் என்றும், இந்த நாடுகளில் தேசிய வறுமைக்கோடு இன்னும் அதிகமான நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

தெற்கு ஆசியா மற்றும் சஹாராவிற்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில், ‘ இரண்டு டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இருக்கிறது என்றும், கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் விளிம்பிலும் முன்னேற்றம் இருக்கும் ‘ என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

2000 ஆண்டு ஐக்கிய நாடுகள் உச்சிமாநாடு தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க சில குறிக்கோள்களை இலக்குகளை நிர்ணயித்தது. 1990இலிருந்து 2015வரையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளை இது நிர்ணயித்தது.

சீனா மற்றும் இந்தியா நாடுகளில் நடந்திருக்கும் முன்னேற்றம் வெகுவாக தீவிர ஏழ்மையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை 1990இல் 28 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்திருக்கிறது.

இந்தியா மற்றும் சீனாவில் நடக்கும் முன்னேற்றம் தொடர்ந்து நடந்தால் உலக வறுமை வெகுவாகக் குறையும் என்றும், ‘சுமார் 500 மில்லியன் மக்கள் தீவிர வறுமையிலிருந்து வெளியேறுவார்கள் ‘ என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் எய்ட்ஸ் நோயின் தீவிரத்தால், பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு 47 வருடங்கள் என குறைந்துவிட்டது என்றும், கடந்த 20 வருடங்களில் ஆரோக்கியத்தில் நடந்திருக்கும் முன்னேற்றத்தை இது சுத்தமாகக் காலியாக்கிவிட்டது என்றும் கூறுகிறது. 2002ஆம் ஆண்டில் சுமார் 42 மில்லியன் வளர்ந்தவர்களும், 5 மில்லியன் குழந்தைகளும் எய்ட்ஸ்-ஹெச்ஐவி உடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று இந்த அறிக்கை காட்டுகிறது.

பணக்காரர்கள் மத்தியில் குழந்தை வாழும் வீதம் அதிகரித்தும், ஏழைகள் மத்தியில் இது குறைந்தும் காணப்படுகிறது என்றும் கூறுகிறது.

‘இந்த நோய் ஆசிரியர்களையும், கல்வியையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது ‘ என்று இந்த அறிக்கை வருந்துகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையில் 95 சதவீதம் வளரும் நாடுகளிலும் 70 சதவீதம் சஹாரா சார்ந்த ஆப்பிரிக்க நாடுகளிலும் இருக்கிறார்கள்.

உலக வங்கி அறிக்கையின் படி, ‘ 2010ஆம் ஆண்டுக்குள், சுமார் 45 மில்லியன் ஏழை நாட்டு மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் ‘ என்று எச்சரிக்கிறது.

அடிப்படை வசதி, சுத்தமான தண்ணீர், சுகாதாரமான சூழ்நிலை ஆகியவை இல்லாமையே மலம் மூலம் பரவும் பலவகை நோய்கள் வளரும் நாடுகளில் அதிகமாக இருப்பதற்குக் காரணம். 2000 ஆண்டில், 12 பில்லியன் ஆண்களும் பெண்களும் அடிப்படை வசதிகள், சுத்தமான தண்ணீர் ஆகியவை இல்லாமல் இருப்பார்கள். இவர்களில் 25 சதவீதம் சஹாரா சுற்றிய ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பார்கள் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சுத்தமான குடிநீர் கிடைக்கும் மக்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 270000ஆக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் 2015க்குள் நல்ல குடிநீர் பெறாத மக்களின் தொகையை பாதியாகக் குறைக்க முடியும்.

http://allafrica.com/stories/200405110037.html

Series Navigation

ராம்போலோ மோல்ஃப்ஹே

ராம்போலோ மோல்ஃப்ஹே