உறைவாளொரு புலியோ?

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

நட்சத்திரவாசி


உறைக்குள் சொருகி வைக்கப்பட்ட
வாள் உருவும் போதே
மினுமினிக்கிறது
பளபளக்கும் அதன் நுனி எப்போதும்
கூர் தீட்டப்பட்டதாய் இருக்கிறது
வேறொரு வாளோடு மோதும் வரை
சப்தம் உள்ளீடாகவே இருக்கிறது
ஆயுத சாலையின் வெள்ளி கேடயத்தின்
இருபுறமும் சொருகியிருக்கும் வாள்களோ
வலிமையின் புலி நகம்
கொல்லன்பட்டறையில் வார்க்கப்பட்ட
புதுவாளை கையில் பிடிக்கும் போதே
வீரம் வந்து விடுகிறது.
எதிரியாரிற்றிருந்தாலும்
ஒரு முறையாவது ஒரு சுழற்று சுழற்றி
குத்தி எடுப்பதும் தனி கலை தான்
ரத்தம் படியாத வாளென்றாலும்
கொலைவாள் என்றே அழைக்கப்படுகிறது
தற்காப்பு கலையாகட்டும்
யுத்த களமாகட்டும்
தனித்த சேவகமாகட்டும்
வாளுக்கு நிகர் வாளே தான்
விளையாட்டு துறை வாள்களோ
அதீத ஜோடனையுடன்
மோதிப்பார்த்து கொள்கிறது
எனினும் ரத்தம் படியாத
வாள்களுக்கு எக்காலத்திலும்
மதிப்பில்லை போலும்
ஒரு ஜப்பானிய நிஞ்சானுக்கு
வாளை தவிர அதிக மதிப்பு
வேறொன்றிர்க்குமில்லை
நிஞ்சான் வாளெடுத்து சுழற்றும் போது
பல தலைமுறைகளின்
சமுராயாக காணப்படுகிறான்
வாள் சொல்லும் கதைகளும்
பேசும் சொற்களும்
எக்காலத்துக்குமான பூரணத்துவம்
பெற்றவை
வாள் ஆதியிலும் யுத்தத்திற்கே
பயன்பட்டது.
ஆதியை சொல்லும் ஹாலிவுட்டுக்கும்
இப்போது யுத்தத்திலேயே
வாள் எடுக்கப்படுகிறது.

Series Navigation