உருவமற்ற நான்.
எஸ். வைதேஹி.

நினைவுகளின் பின்னால் ஓடி
எனக்கு சலிப்பாகி விட்டது.
தலைக்குப் பின்னே
வழிந்து ஓடும்
நேற்றைய யிரவு..
யிருப்பினும், நினைவுகளுடன்
கூடிய என்னைத் தேடத் தொடங்கினேன்.
காடுகளின் நடுவில்
என்னைத் தொலைத்துவிட்டு
மலைகளின் விளிம்புகளில்
என்னைத்தேடிக் கொண்டிருந்தேன்.
மண் புழு நெளியும்
மண்டைக்குள்
நினைவு தப்பி
காலம் கரைந்து
முகம் யில்லா
என்னைக் கண்டு பிடித்தேன்.
துடைத்து விட்டாற்போல்
மெல்லிய கீறல் நினைவுடன்
மொட்டையான வெட்ட வெளியில்
கிடந்தேன் நான்.
************