மன்னனாய் என் வாழ்க்கை..

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

ஆனந்தன்


என் கம்மிரமான நடை
என்னையே பெருமிதத்தது!
அரங்கு முழுவதும்
அக்ரோசமான ஒலி!
அரியனை எறியதும்
அரவே நிறுத்த செல்லவேண்டும்!
என்னை வாழ்த்தும் ஒலி என்பதால்
என்னால் நிறுத்த சொல்ல இயலவில்லை!
புகழுக்கு செவி சாய்தோர்
பட்டியலில் என்னைபும் சேர்த்தேன்!

என் கட்டளையை
ஏற்க்க எத்தனைப்பேர்!
என் கண்ணசைவை
எதிர்பார்த்து எத்தனைப்பேர்!
தலை அசைத்தால்
தலை வணங்க எத்தனைப்பேர்!
நினைத்தாலே உயிர் செரிக்கிறது!!

பிறந்த நாளாம் இன்று எனக்கு
புகழ்ந்து பாட புலவர்கள் கூட்டம்!
மகிழ்ந்து ஆட
மங்கையர் கூட்டம்!
ஊர் முழுக்க மாவிலைத் தோரணம்
உள்ளம் மகிழ்ந்த மக்கள் வெள்ளம்!

இனிப்பு வகையில்
இத்தனை வகையா ?
இன்றுதான் அறிந்தேன்
இந்த உண்மையை!

மங்காத மாலை வெயிலில்
மயங்க வைக்கும்
மேற்கு வானத்தை பார்த்து
மனம் மகிழ்ந்து
மயங்கிய பொன்னான நேரம்,
கண்ணத்தில் விழுந்த சூரிய ஒளிமட்டும்
கலக்கியது என் மனதை
கனத்த மனதுடன் மெதுவாக
கண்விழித்தேன்!

கறும் இருளின் குருதியும்
சிவப்புத்தான் என்று கதிரவன்,
உறங்கும் இந்த உண்னத
உலகிற்கு உணர்த்தும் நேரமது!

மூடாதிருந்த சன்னலை மூடி
மீண்டும் தயாரானேன் – என்
மன்னன் வாழ்க்கை வாழ!

***

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்