This entry is in the series 20040205_Issue

ஹென்னா அர்ஷத்


தேவையான பொருட்கள்

10 பிரட் ஸ்லைஸ், ரொட்டித்துண்டுகள்

6-7 உருளைக்கிழங்குகள் நடுத்தர அளவு

2 முட்டைகள்

3-4 பச்சை மிளகாய்கள் வெட்டியது

4 மேஜைக்கரண்டி கொத்துமல்லி இலைகள்

1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்

2 மேஜைக்கரண்டி காய்ந்த மாதுளை தூள்

1 மேஜைக்கரண்டி ஜீரகம்

1-2 பாலாடைக்கட்டி துண்டுகள் ( சீஸ் ஸ்லைஸ்கள்)

எண்ணெய் தேவையான அளவு

உப்பு ருசிக்கேற்ப

சிவப்பு மிளகாய்தூள் ருசிக்கேற்ப

செய்முறை

உருளைக்கிழங்குகள் மெதுவாகும்வரை வேகவிடவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து நசுக்கி மாவுபோல ஆக்கி சிவப்பு மிளகாய்த்தூள், உப்பு, பச்சை மிளகாய், ஜீரகம், மல்லித்தூள், கொத்துமல்லி இலைகள், மாதுளைத்தூள், சீஸ் போட்டு நன்றாகக் கலக்கவும்.

இப்போது, ரொட்டித்துண்டுகளை எடுத்து தண்ணீரில் நனைத்து மிருதுவாக ஆக்கவும். இதன் மீது மேலே செய்த கலவையை வைத்து ரொட்டியை உருட்டி நீள்வட்ட வடிவமாக உருட்டவும். இரண்டு பக்கங்களும் நன்றாக அழுத்தி இறுக்கவும். இப்போது இதனை முட்டையில் நனைத்து, ரொட்டி தூள்களில் நனைத்து எண்ணெயில் பொன்னிறமாகும்வரை பொறித்து எடுக்கவும்.

Series Navigation