பி.கே சிவகுமார்
உமா மகேஸ்வரி பற்றி:
1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின் நடுவே (1990), வெறும் பொழுது (2002), கற்பாவை(2004) ஆகிய கவிதைத் தொகுதிகளும், மரப்பாச்சி (2002), தொலைகடல் (2004) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும், யாரும் யாருடனும் இல்லை (2003) என்ற நாவலும் வெளியாகியுள்ளன. கதா விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இந்தியா டுடேயின் சிகரம் விருது, ஏலாதி, இலக்கிய சிந்தனை, கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசுகள் பெற்றவர். ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார்.
கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து:
”உமா மகேஸ்வரியின் கதைகளில் அழகியல் இயல்பாக வெளிப்படுவது இங்கே விசேஷமாய்க் குறிப்பிடத்தக்கது. அழகியலுக்கு எதிரான ஒரு பொதுக்கருத்தை தமிழ் இலக்கியச் சூழல் முன்வைத்து, இலக்கிய நுண் உணர்வினை அரசியலுக்குப் பலி கொடுத்துவிட்ட சூழலில் அர்த்தமுள்ள மறுப்பாக உமா மகேஸ்வரியின் அழகியல் மலர்ந்திருக்கிறது. வலிந்து ஏற்றப்படாத மலர்ச்சி அது. மணற்கன்னியும், ஏகாந்த மரமும் இந்த அழகியலின் எழிலையும் – கன்னி, ஏகாந்தம் என – சோகத்தையும் ஒருசேர மலர்விக்கின்றன. மற்ற கதைகளின் போக்கிற்கு உமா மகேஸ்வரியின் அழகியல் பார்வை இயல்பான வலிமையை அளிக்கிறது.
முன் உதாரணம் இல்லாத தனித்த பார்வையும், தனித்த பாணியும் கொண்ட இந்தக் கதைகளின் தொகுப்பை வெளியிடுவதில் எனி இந்தியன் பதிப்பகம் பெருமை கொள்கிறது.”
உமா மகேஸ்வரியின் என்னுரையிலிருந்து:
”இந்தக் கதைகளைப் படிக்கும்போது நான் எழுதாமல் விட்ட கதைகள் என்னைச் சூழ்ந்து சுழல்கின்றன. எப்போதும் ஏதாவது ஒரு கதையுடன் இருப்பது எவ்வளவு ஆசுவாசமானது!”
பதினான்கு சிறுகதைகள் புத்தகத்தில் உள்ளன.
மொத்த பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், #102, எண் 57,பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ்,தெற்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600 017. தொலைபேசி: +91-44-24329283. புத்தகத்தை இணையத்தில் ஆன்லைனில் வாங்க: http://www.AnyIndian.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>
- தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1
- கஜினி Vs கஜினி
- எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”
- தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு
- கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு
- தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’
- அழகியலும் எதிர் அழகியலும்
- கொற்றவை படைத்த ஜெயமோகன்
- பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
- நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
- பெருந்துயரின் பேரலை
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று
- தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்
- சூரியன் வருவான்
- விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்
- கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?
- நினைவில் எம்.ஜி.ஆர்
- தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை
- யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்
- பொங்கல் வாழ்த்துகள்
- பொம்மை நேசம்
- கொடுமையிது! அறக்கொலையே
- கவிதைகள்
- பிறப்பு…
- வேத வனம் விருட்சம் 19
- ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே
- சூரிய ராகம்
- உயிர்ப்பிக்கும் ஏசுநாதர்