This entry is in the series 20040422_Issue

ஸ்ரீ மங்கை


எனது தேனீர்
ஆறி விட்டது.

அடர்ந்த செம்மையேறி,
எதிர்வீட்டுக் கிழவியின் முகம்போல
சுருக்கங்களுடன் ஆவி படிந்து
வெகு நேரமாகிவிட்டது.

ஒரே மூச்சில் குடிக்கும்போது
கசந்து குமட்டிக் கொண்டு வந்தாலும்,
கோப்பை காலியாக இருப்பதில்
இங்கு சிலருக்கு மன அமைதி..

எனக்குத்தான் உறுத்துகிறது..
விளிம்பிலும்,அடியிலும்
கறுத்த தேநீர்க் கசண்டடித்த
காலிக் கோப்பை.
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation