‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

கற்பகவிநாயகம்


கட்டுரையாளர் நகைச்சுவையாய்ப் பேசுவதாய் நினைத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உணர்வைக் கேவலப்படுத்துகிறார். பெரியார் என்னமோ டைலர் கடையில் சட்டை தைத்துக் கொடுத்தார் மாதிரி என்று. அவர் சட்டை தைத்துக்கொடுக்க வரவில்லைதான். எங்கள் தந்தை சட்டை போட்டுப் பள்ளிக்குள் நுழையும் காலத்தில் குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து எங்கள் குலங்களையே வேரறுக்க நினைத்த சூதறிஞர் ராஜாஜியின் திட்டத்தை முறியடிக்க பெரியாரும் காமராஜரும் போராடினர். அதேமாதிரி கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என வாதாட அல்லாடி கிருஷ்ணசாமி (இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையிலும் இருந்தவர்) இருந்தார். சுப்ரீம் கோர்ட்டும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு செல்லாது எனத்தீர்ப்பினைத்தந்து எங்கள் தந்தையர் தலைமுறையினை ஒழித்திட முனைந்தது.

பெரியார் மக்களைத்திரட்டிப் போராடியதுதான் எங்களுக்கு முந்தைய தலைமுறையினைக் காக்க இட ஒதுக்கீட்டு சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.

இதன் பின்னர்தான் சட்டை போட்டுப் பள்ளிக்குப் போய் வேலைக்கும் போனார்கள்.

மலர் மன்னன் மாதிரியான கருவிலே திருவுடையாளர்களுக்கு இவையெல்லாம் எரிச்சலைத்தருகின்றன.

****

vellaram@hotmail.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்