இறக்கை வெளியீடு ‍- களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா

This entry is part [part not set] of 33 in the series 20071220_Issue

அறிவிப்பு


இறக்கை வெளியீடு ‍- களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா

நாள் : 26-01-2008 இடம் : ஏர்வாடி, சேலம் மாவட்டம்.
நேரம் : பிற்பகல் 3 மணி
தொடர்புக்கு : 98946 05371, 98946 12474
Email: smilepriyan@gmail.com

பஸ் ரூட் : சேலம் – மேட்டூர் வழித்தடத்தில் மேச்சேரி உள்ளது.
மேச்சேரி – நங்கவள்ளி வழித்தடத்தில் 6 கி.மீ. தொலைவில் ஏர்வாடி உள்ள‌து.

பஸ் ஸ்டாப் : புதூர் நான்கு ரோடு,
பஸ் : நாகநாதன், பாலாஜி, 11, 07, S11,10, லட்சுமி சரஸ்வதி
—————————————————————–
தலைமை: ச. தமிழ்ச் செல்வன், மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச.
முன்னிலை: தேவேந்திர பூபதி, எழுத்தாளர்
நிகழ்ச்சி தொகுப்பு : பெருமாள் முருகன், எழுத்தாளர்
——————————————————————–
அமர்வு 1 : மாலை 3 முதல் 4 மணி வரை
களரி கூட்டுதல் : அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா
வரவேற்புரை : ஜெ. இராதாகிருஷ்ணன் (ஆசிரியர், நறுமுகை)
துவக்கவுரை : ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர், புதுவிசை)
—————————————————-

களரி தெருக்கூத்துப்பயிற்சி பட்டறை
துவக்கிவைத்து சிறப்புரை :இளையபாரதி, செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
வாழ்த்துரை : தேவேந்திரபூபதி, யவனிகா ஸ்ரீராம், கோ. பழனி, கி. பார்த்திபராஜா, பாமரன், அழகிய பெரியவன்
——————————————————————–
அமர்வு 2 : மாலை 4 முதல் 6 வரை
கிராமிய தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு விருது & பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்புரை :
டாக்டர் கே.ஏ.குணசேகரன், நாடகத்துறைத் தlaiவர், புதுவைப் பல்கலைக்கழகம்
வாழ்த்துரை : பாமா, அனுராதா, கீதாஞ்சலி ப்ரியதர்சினி, எழிலரசி, சக்தி அருளானந்தம்
——————————————————————–
அமர்வு – 3 :
இறக்கை மக்கள் கல இலக்கிய சிறப்பிதழ் வெளியீட்டு
சிறப்புரை : பிரள‌யன், நாடகவியலாளர்.
பெற்றுக்கொள்பவர்: பெரியசாமி, தொழிலதிபர்
வாழ்த்துரை: சாருநிவேதிதா, நாஞ்சில் நாடன், செல்வ புவியரசன், ஞானதிரவியம்
ஏற்புரை : ராசமைந்தன், ஆசிரியர், இறக்கை
நிறைவுரை: ச. தமிழ்ச்செல்வன்
நன்றியுரை: மு. ஹரிகிருஷ்ணன்
——————————————————————–
நிகழ்ச்சி ஒருங்கிணப்பு : களரி, இறக்கை, இரா. மணிவண்ணன், வ. சண்முகப்பிரியன்
——————————————————————–
அமர்வு – 4 :
களரி தெருக்கூத்து பயிற்சிப் பட்டறை வழங்கும் பதினான்காம் நாள் யுத்தம் தெருக்கூத்து
——————————————————————–

தெருக்கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும், பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது, ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம், கூத்து, தோல்பாவை, கட்டை பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வகலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள முடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம் உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரியக்கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள். நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதும், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமயாத கடப்பாடு ஆகும்.

அங்ஙனமே இறக்கை வெளியீடு, இதழ் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப்பெற்றிருக்கிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கின்றேன்.

ந‌ன்கொடைக‌ள் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌.

இப்படிக்கு
மு. ஹரிகிருஷ்ணன், பதிப்பாசிரியர், இறக்கை
——————————————————————–
பங்குபெறுவோர் : வெ.மு.பொதியவெற்பன், போப்பு, சுதாகர் கத்தக், கண்மணி குணசேகரன், பா. திருச்செந்தாழை, லட்சுமி சரவணக்குமார், நாதாரி, நட்சத்திரன், மனோன்மணி, அசோகன், வஹாப், நிறைமதி, க.சீ.சிவக்குமார், எழில்வரதன், வே.பாபு. ஷாராஜ், லக்ஷ்மி மணிவண்னன், சைதன்யா, ராஜன் ஆத்தியப்பன், ந.செந்தில்குமார், பொன்குமார், மயூரா ரத்தினசாமி, பொ.செந்திலரசு, இசை, இளங்கோ கிருஷ்ணன், காலபைரவன், தமிழ்செல்வா, ஜெ.முனுசாமி, மீரான் மைதின், அ.கார்த்திகேயன், வெங்கடேசன், லட்சுமி பாலாஜி, சந்தியூர் கோவிந்தன், பாலமுருகன், சுவாமிநாதன், பெரியசாமி, இரகு, சூர்யநிலா
——————————————————————–

சான்றிதழ் மற்றும் விருது பெறுவோர் :
1. மாயவன், வனவாசி.
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : துரியோதனன் கூத்து : பதினெட்டாம் போர்க்களம்

2. பொன்னான், சமத்துவபுரம் குஞ்சாண்டியூர்
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம்: கண்ணன் கூத்து : சுந்தரிக்கல்யாணம்

3. கோவிந்தசாமி, அம்மாபேட்டை
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : போர்மன்னன் கூத்து : சங்குபதி கல்யாணம் பிறசேர்க்கை : பொம்மலாட்டக் கலைஞர்

4. சித்தன், நல்லூர்
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : கோவலன் கூத்து : கோவலன்

5. திருமதி அங்கி, செல்லமுடி
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : கண்ணன் கூத்து : பவளக்கொடி கல்யாணம்

6. திருமதி லட்சுமி, காளிக்கவுண்டனூர்
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : உத்திரகுமாரன் கூத்து : மாடுபிடி சண்டை
பிறசேர்க்கை : சிறந்த உடையலங்கார வடிவமைப்பாளர்

7. திருமதி காளியம்மாள், அம்மாபேட்டை
கலைச்சேவை 50 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : அல்லி கூத்து : காந்தாரிசிறை

8. ஜெயா, அம்மாபேட்டை
கலைச்சேவை 40 ஆண்டுகள்
தோல்பாவக்கலைஞர். பொம்மலாட்டக் கலைஞர் தெருக்கூத்துக் கலைஞர் (பெண்வேடம்)
சிறப்புத்தோற்றம் : சந்திரவதனி கூத்து : மாற்றாந்தாய் கொடுமை

9. பெரியமா, நல்லூர்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : கர்ணன் கூத்து : கர்ணமோட்சம்

10. வீரப்பன், சின்னப்பட்டி
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : நல்லதங்காள் கூத்து : நல்ல தங்காள்

11. கணேசன், அம்மாபேட்டை
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : மயில்ராவணன் கூத்து : மயில்ராவணன்
பிறசேர்க்கை : தோல்பாவை / பொம்மலாட்டக் கலைஞர்

12. கனகராஜன், நத்தமேடு
கலைச்சேவை 35 ஆண்டுகள் ஆண்வேடம்- தெருக்கூத்து
சிறப்புத் தோற்றம் : நளன் கூத்து : தமயேந்திரி கல்யாணம்

13. குருநாதன்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : வன்னியன் கூத்து : வன்னியபுராணம்

14. ராசேந்திரன், நல்லூர்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : சந்திரமதி கூத்து: அரிச்சந்திரா

15. செங்கோடன், பத்தாங்குட்டை
கலைச்சேவை 40 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : சித்ரரேகை கூத்து: வாணாசூரன் சண்ட

16. மாணிக்கம்பட்டி கணேசன்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : அரிச்சந்திரன் கூத்து : அரிச்சந்திரா

17. காந்தி, சூரியனூர்
கலைச்சேவை 40 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : வீரத்தங்காள் கூத்து : குன்னுடையார் நாடகம்

18. சுப்ரமணியன், ஏகபுரம்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : ஹனுமார் கூத்து : லங்காதகனம்

19. கொம்பாடிப்பட்டி ராஜு
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : சீதை கூத்து : லவகுசா

20. தானாபதியூர் அர்ச்சுனன்
கலைச்சேவை 30 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : திரௌபதி கூத்து : பாஞ்சாலி சபதம்

21. தங்கவேல், சித்திரபாளையம்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : பீமன் கூத்து : கீசகவதம்

22. எலிமேடு வடிவேல்
கலைச்சேவை 30 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : பொம்மி கூத்து : மரவீரன்

23. அர்ச்சுனன், பவானி
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : முத்துவீரன் கூத்து : மரவீரன்

24. மாணிக்கம், குமாரபாளையம்
கலைச்சேவை 30 ஆண்டுகள்
சிறப்புத் தோற்றம் : கோமாளி பபூன்

25. ஆண்டவர், பவானி
கலைச்சேவை 30 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம்: கோமாளி பபூன்

26 கூடலூர் செல்வம்
கலைச்சேவை 35 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : இரண்யன் கூத்து : இரண்யசம்ஹாரம்

27. சுப்ரமணி, அம்மாபேட்டை
கலைச்சேவை 30 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : நாககன்னி கூத்து : நாகார்ஜுனன் பிறசேர்க்கை : பொம்மலாட்டக்கலைஞர்

28. இராமு, அம்மாபேட்டை
கலைச்சேவை 30 ஆண்டுகள்
சிறப்புத்தோற்றம் : அரவான் கூத்து : அரவான் களப்பலி

29. செல்லப்பன், அம்மாபேட்டை
கலைச்சேவை 50 ஆண்டுகள் மிருதங்கக் கலைஞர் – தெருக்கூத்து
தனித்திறமைகள் : தேர்ந்த ஞானம், ஏழு மிருதங்கங்களை ஏக நேரத்தில் வாசிக்கக்கூடியவர்.
பிறசேர்க்கை : பொம்மலாட்டக் கலைஞர் தோல்பாவைக் கலைஞர், தெருக்கூத்க் கலைஞர்

30. கருப்பண்னன், சித்தூர்
கலைச்சேவை 50 ஆண்டுகள் குழலிசைக் கலைஞர்

31. பெருமாள், அம்மாபேட்டை,
கலைச்சேவை 40 ஆண்டுகள்.மிருதங்கக் கலைஞர்

32. முனுசாமி, பள்ளிபட்டி,
கலைச்சேவை 30 வருடம் மிருதங்கக்கலைஞர்

33. செல்வம், கண்டர்குலமாணிக்கம்,
கலைச்சேவை 30 வருடம் குழலிசைக் கலைஞர்

34. நடராசன், அம்மாபேட்டை,
கலைச்சேவை 30 வருடம். மிருதங்கக் கலைஞர்

35. சின்னுச்சாமி, பூரன்கோட்டை,
கலைசேவை 35 வருடம் ஜால்ரா கலைஞர்

இளய தலைமுறைக்கலைஞர்கள் : கோவிந்தன், சேட்டு, ரமேஷ், குமார், சிதம்பரம், சக்திவேல், காவேரி, புவியரசி, சிவசேகர், முருகன், மாதேஸ்வரன், மணிகண்டன்


வா.மணிகண்டன்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு