இரைக்கு அலையும் நிகழ்
நெப்போலியன்-சிங்கப்பூர்

அவசரமாய்
குறுக்கிட்டிருக்க வேண்டும்
கடந்த வேகம்
நொறுக்கிச் சிதைத்திருக்கும்.
ஒரு கொலை
நிகழ்த்திய
மிரட்சியின்றி
இன்னொரு திசையில்
இயல்பாய்
பயணித்துக் கொண்டிருக்கும்
நிகழ்.
குடல் பிதுங்கி
கூழாய்க் கிடக்கும்
அதை
உச்சியிலிருந்தபடி
கூர் கொத்திப்
பிரயத்தனத்துடன்
ஒரு பருந்தும்…
கிழிந்த
உடைசல் குடையை
வெயில் தின்ன
விரித்தபடி
நானும்…
இரைக்கு
அலைந்தபடியே……!
—-
kavingarnepolian@yahoo.com.sg