இருதலைகள்…

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.


இருதலை சகோதரிகளுக்கு
விடுதலைக் கொடுக்கப்பட்டது
இந்த உலகிலிருந்தே…

இருபத்து ஒன்பது ஆண்டுகள்
இருதலையாய் வாழ்ந்து
இறுதியில் பிரிக்கபட்டு
பிணமாக்கப்பட்டவர்கள்…

இதனை
இயற்கையின் வெற்றி என்பதா ?
செயற்கையின் தோல்வி என்பதா ?
விதி செய்ய சதி என்று
வருத்தப்பட்டு கொள்ளவதா ?

புன்னகை முகங்களுடன் பார்த்து
எங்களை கண்கலங்க வைத்துவிட்டார்கள்…
உங்கள் ஆத்மா அமைதி அடைய
உலகமே பிராத்திக்கிறது….

balageethan@rediffmail.com

Series Navigation

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.