இரயில் பயணங்களில்

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

கோமாளி


மரத்தின் நிழல் வெயிலுக்கு சற்று ஆற்றுப் படுத்தும். உங்களையும் என்னையும் தொடர்ந்து வரும நிழல் யாருக்காவது பயன்படுமா? அந்த நிழல் சந்தர்ப்பவாத நிழல். காலையிலும் மாலையில் நன்றாகத் தெரியும் நிழல் மதியத்தில் காலடியில் ஒளிந்து கொள்ளும். இந்த மனிதனின் நிழலுக்கு ஜன் நாயகத்திற்கு ஒற்றுமை உண்டு. அது என்ன? மனித நிழலே சந்தர்ப்பவாதியான போது மனிதன் மட்டும் என்ன மஹாத்மாவாகவா இருக்கப்போகிறான். விரும்பினாலும் விரும்பாவிட்டால் ஜன நாயகம் மனிதன் கூடவே வரும் நிழலாய் அவன் வாழ்க்கையில் விளையாடும் விபரீதங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்திய இரயில்வே இந்திய அரசால் நடத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். 16 இலட்சம் ஊழியர்கள் இதில் பணிபுரிகின்றனர். 2005 நிதிநிலை அறிக்கையின் படி, இந்திய இரயில்வே 46,635 கோடி ரூபாய்களை வருவாயாகப் பெற்றுள்ளது. மக்களின் தோழனாக, அவர்களின் பயணத்திற்காக செயல்படும் இரயில்வே துறையில் ஊனமுற்றவர்களுக்காகவென்று டிஸேபில்ட் கோச்சு ஒன்றினை ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் இரயிலிலும் இணைத்திருப்பார்கள். அந்தக் கோச்சில் நடைபெறும் கொடுமையினை விளக்குவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

சக மனிதனுக்கு கிடைத்திருக்கும் வசதிகளை மற்றவர்கள் அராஜகமாக பிடுங்கி அனுபவிப்பது என்பது கொலைக் குற்றத்துக்கு நிகரான செயல்.

எனது சிறுவயதில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் எனக்கு இருக்கிறது. பிறந்ததிலிருந்து மாமா வீட்டில் வளர்ந்த படியால் அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உறவுக்காரர் ஒருவர் நான் இறந்து விட்டதாக விஏஓவின் சான்றிதழ் வாங்கி சொத்தை அவர் பெயருக்கு மாற்றி விட்டார். இதற்கு விஏஓவும் உடந்தை. இதை அறிந்த அம்மா சமாபந்திக்கு அழைத்துச் சென்றார். ஆர்ஐ எங்களது புகாரைப் படித்து மிரண்டு விட்டார். விஏஓவினை அழைத்து விபரம் கேட்க ஊரில் நான்கு பேர் சொன்னார்கள் என்று விட்டேத்தியாகச் சொன்னார். நம்ப மாட்டீர்கள். கோபத்துடன் எழுந்த ஆர்ஐ செருப்பைக் கழட்டி விஏஓவினை அடி பின்னி எடுத்து விட்டார். சுற்றி நின்றவர்கள் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார்கள். நீயெல்லாம் ஒரு மனிதனாடா என்று கோபத்துடன் கேட்டு லெட்ஜரில் என் பெயரை மாற்றி எழுதி கையெழுத்து இட்டு முன்பு மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்தார். இதே போன்ற அவலத்தை இந்திய ரயில்வே துறையின் டிடிஆரும், ரயில்வே போலீஸாரும் இன்றளவும் இணைந்து
வாழவும் வழியின்றி சாகவும் முடியாமல் பூமிக்கும் பாரமாய் தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கும் ஊனமுற்றவர்களை புழுவிலும் கேவலமாக மதித்து மனம் கூசாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். யார் இவர்களை அடிப்பது ???? அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கீழே படியுங்கள்.

வயதான மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒவ்வொரு டிரெயினிலும் டிசேபில்ட் கோச்சு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இவர்கள் பாத்ரூம் செல்லவும், வசதியாக இயங்கவும் வசதிகள் இருக்கும். கூட்டம் இருந்தால் ஊனமுற்றவர்களுக்கு இடம் கொடுத்த பிறகு மீதி இடங்களை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இவர்கள் செய்வது என்ன ?

சென்னையிலிருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் டிஸேபில்ட் கோச்சில் யாராவது சற்று எட்டிப்பாருங்கள் தெரியும் அங்கு நடக்கும் அவலங்களை. டிடிஆரும், இரயில்வே பாதுகாப்பு போலீஸாரும் சேர்ந்து கொண்டு ஊனமுற்றோருக்கான கோச்சுகளின் டிக்கெட்டுகளை மற்றவர்களுக்கு விற்கின்றனர். முன்பே பதிவு செய்து வைத்த ஊனமுற்றவர்கள் கோச்சில் ஏறினால் அவர்களுக்கு இடம் கிடைப்பது இல்லை. டிக்கெட்டை காட்டி இடம் வேண்டுமென்று கேட்டால் மற்றவர்கள் நாங்களும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருப்பதாக சொல்லி இடம் தர மறுக்கின்றார்கள். டிடிஆரிடம் புகார் சொன்னால் போடா வேலையைப் பார்த்துக் கொண்டு மிரட்டுகிறார் டிடிஆர். புகார் சொன்ன என் நண்பரை அடிக்க வந்திருக்கிறார் ஒரு டிடிஆர். அதற்கு இரயில்வே போலீஸார் வேறு துணை போனார்களாம். இந்த போலீஸாரை நம்பி மக்கள் பயணம் செய்கிறார்கள். வேடிக்கையாய் இல்லை.

டிடிஆருக்கு காசு சம்பாதித்துக் கொடுக்கவும் இரயில்வேயில் வேலை செய்வோரும் இலவசமாகவும் வசதியாகவும் செல்ல அந்த கோச்சினைத் தான் பயன் படுத்துகிறார்கள்.

இந்தத் திருட்டுக் கூட்டத்தினை பற்றியோ, இரயில்வே துறையில் நடந்து வரும் இந்த அராஜகப் போக்கினையோ கம்ப்ளைண்ட் செய்தால் என்னவென்று கேட்கக் கூட ஆட்கள் இன்றி இருப்பது இந்திய இரயில்வே துறையின் கேடு கெட்ட நிர்வாகத்தினைக் குறிக்கிறது. புகார் செய்ய தொலைபேசி எண் ஒன்றினை இரயில்வே துறை அறிவித்து இருக்கிறது. யாராவது புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்களா என்றால் இல்லை. ஒரு புண்ணாக்கும் கிடையாது.

திருடன் செய்யும் கொலை திருடும் போது யாராவது பார்த்து விட்டால் தப்பிக்க கொலை செய்வான். ரவுடி கொலையினைத் தொழிலாகச் செய்பவன். யாருக்கும் எந்தப் பாவமும் செய்யாத செய்ய்யும் இயலாத ஊனமுற்றவர்களை உயிர்வதை செய்து கொல்வது என்பது மேற்படி செயலை விடக் கேவலமான செயல்தானே. இந்திய இரயில்வேத் துறை கொலைகாரர்களின் கூடம். எம கிங்கரர்கள் உலாவும் எமலோகம் இந்திய இரயில்வேத் துறை. இப்படிப்பட்ட கொலைகார துறை லாபத்தில் இயங்குவது என்று சொல்லி பெருமை அடித்துக் கொள்வது கொலைகாரன் ஒருவன் கொலை செய்து சொத்து சேர்ப்பது போன்ற அவலமான காரியத்துக்கு ஒப்பானதாகும்.

இரயில்வேத் துறை அமைச்சர் இவற்றையெல்லாம் கவனிக்காமல் பல்கலைக் கழகங்களில் உரையாற்றச் செல்கிறார். மனித உரிமை அமைப்புகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. மெஷின்கன்னால் கண்ணில் படுவோரை எல்லாம் ஈவு இரக்கம் காட்டாமல் சுட்டுத்தள்ளும் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் மனித உரிமை அமைப்புகள் டிஸேபில்ட் கோச்சில் ஊனமுற்றவர்களை வதைக்கும் டிடிஆரையும், இரயில்வே போலீஸாரையும் கண்டு கொள்ளாமல் விடுவது மனித உரிமை அமைப்புகளின் கேலிக்குரிய செயல்பாட்டினைச் சுட்டுகிறது.

யார் கேட்பது ? எதிர்த்துக் கேள்வி கேட்டால் அடிக்க வரும் டிடிஆரை யார் தடுப்பது? தடுக்கக்கூடிய நிலையில் இருக்கும் இரயில்வே போலீஸாரும் சேர்ந்து அடிக்க வருவதை என்னவென்று சொல்வது ?? புகார் செய்தால் கேட்க நாதியில்லை. யாரும் எதுவும் செய்யவில்லை எனில் என்ன செய்வது ? என்ன வழி ?

பணக்காரனும், ஏழையும் ஓட்டுப் போட்டுத்தான் அரசியல்வாதி ஜெயிக்கிறான். அந்த அரசியல்வாதியினால் தான் நாட்டு நிர்வாகம் நடக்கிறது. மாற்றுகிறோம் வாய்ப்புக் கொடுங்கள் என்று கூவிக் கூவி ஓட்டி வாங்கிய அரசியல்வாதி பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரனுக்கு ஒரு கல்வி முறை, ஏழைக்கு ஒரு கல்வி முறை என்ற வழிமுறைகளை உருவாக்குகிறான்.

அது என்ன பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்கிறீர்களா ? பொதுமக்கள் பெருவாரியாக பயன்படுத்தும் பெட்ரோலின் விலையினை உடனடியாக குறைத்தானா நாட்டை ஆளும் அரசியல்வாதி. கச்சா எண்ணை விலை குறைந்ததும் உடனடியாக விமானத்திற்கான எரிபொருள் விலையினை அல்லவா குறைத்தான். விமானத்தில் குடியானவனும், ஏழையுமா பயணம் செய்கிறார்கள். பணக்கார்ர்களுக்கு மட்டுமே பயன்படும் சட்ட்த்தை போட்டவன் ஏழைகளின் ஓட்டையுமல்லவா பெற்றுக் கொண்டு ஆட்சிக்கு வந்தான்.

உங்களுக்கும் உங்களது சந்த்திகளுக்கும் கிடைக்ககூடிய வசதிகளையும், வாய்ப்புக்களையும் அரசியல்வாதிகளின் குடும்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ அவனுக்கு குண்டி கழுவி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அரசியல்வாதி விடும் குசுவில் கூட ம்ணமிருக்கிறது என்று ஒத்து பாடிக்கொண்டிருக்கின்றீர்கள்.

ஜன நாயக நாட்டில் அரசியல்வாதிகளால் அடுக்கடுக்காய் செய்யப்படும் குற்றங்களில் பலியாகி விடுவது நமது வாழ்க்கை என்பது உங்களுக்குத் தெரியுமா? அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாய் மாறி அவர்களுக்கு சிரைத்து விட்டுக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்களும் சேர்ந்து கொண்டு உங்களை மட்டும் அழிக்க முற்படுவதில்லை. உங்களது சந்ததிகளையும் அழிக்க தனது வாரிசுகளை களமிறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களது கையைக் கொண்டே உங்களது கண்களையே குத்திக் கொண்டிருக்கும் அரசு அலுவலர்களை என்ன செய்வது? சொல்லுங்கள்… நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கும் மேலாய் வரியாய் உனக்கே தெரியாமல் கொள்ளை அடித்து விமானத்திலும், காரிலும் சுகமாக பயணம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் என்ன செய்வது? நீங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களின் பிள்ளைகளுக்கு என்று தனிக் கல்வி. ஆனால் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் இன்றோ நாளையோ இடிந்து விழக்கூடிய ஆசிரியர்களும் இன்றி கிடக்கும் குப்பைக் கூடங்களில் கல்வி. உங்களுக்கு கிடைக்க்க்கூடிய வசதிகளை, உங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க்க் கூடிய வசதிகளை, வாய்ப்புகளை வழியில் பிடுங்கிக் கொள்ளும் கொள்ளைக்கார்ர்களை என்ன செய்யப்போகின்றீர்கள். மனிதா… மனிதா… ஏன் இந்த நிலை. நீயும் புழுவும் ஒன்றா ? மலத்தோடு கேவலமானவனா நீ… என்றைக்கு விழித்தெழப் போகிறாய் ? என்று உன்னிடம் இருந்து உன் சொத்துக்களை பிடுங்கிக் கொண்டிருக்கும் திருடர்களை விரட்டப்போகிறாய் ? ஏன் இந்த அக்கிரமங்களை இன்னும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் உலகோரே ??? ஏன் ???

அநியாயம் செய்வதே தொழிலாய் செய்து வரும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க வேண்டாமா இல்லையா ? சொல்லுங்கள் உலகோர்களே ??? சொல்லுங்கள்….

ஏய் கேடுகெட்ட சமூகமே ! விழித்தெழு… உன்னையும், உன் சந்ததியும் அழிக்க கிளம்பி இருக்கிறார்கள் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும். இனிமேலும் தூங்க வேண்டாம். ரத்தம் கொதிக்க வில்லையா. இன்று ஊனமுற்றவர்களை அடிக்க வருபவர்கள் நாளை உன்னையும் அடிக்க வருவார்கள். உன் பிள்ளைகளையும் அடிப்பார்கள். வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க போகிறாயா? அடிவாங்கி வாங்கி செத்துப் போக போகின்றாயா ? உப்புப் போட்டுச் சாப்பிடுகிறாய் தானே ? பொங்கி எழு. கண்களில் ரத்தம் சிவக்கட்டும். கைகள் துடிக்கட்டும். நரம்புகள் புடைத்து ரத்தம் தெரிக்கட்டும். போராடு. போராட்ட்த்தில் செத்துப் போனாலும் பரவாயில்லை! மற்றவன் வாழ நீ செத்துப் போவதில் தவறில்லை.

அதோ பாருங்கள். பனி மலையிகளில் காசுக்காக நாட்டின் பேரால் பலி கொடுக்கப்பட்ட ஆடுகள் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரென்றே தெரியாத, முன்னே பின்னே பார்த்தே அறியாதவனைக் கொலை செய்ய துப்பாக்கியும் கையுமாக விழி கடுக்க காவல் காக்கிறார்கள் அவர்களின் பெயர் ராணுவ வீர்ர்கள். நாட்டைக் காக்கிறேன் பேர்வழி என்று சட்ட்த்திற்குற்பட்டு உயிரைப் பறிப்பது கொலைகள் அல்லவாம். என்னே ஒரு சட்டம். மக்களின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் சட்டங்களின் மறுமுகத்தைப் பாருங்கள் மக்களே… பாருங்கள்.

அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் மரணப் படுகுழியில் தள்ளப்படும் ராணுவ வீர்ர்களைப் பார்… உலகெங்கிலும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவன் ராணுவ வீரனுக்கு எதிரி என்று அடையாளம் காட்டப்பட்டு சுடப்படுகிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு நீயும், உன் சந்ததிகளும் அரசியல்வாதிகளின் அரசியல் சதுரங்கத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகின்றீர்கள். என்றைக்கு விழித்தெழப் போகின்றீர்கள் உலகோரே…. என்றைக்கு விழித்தெழப் போகின்றீர்கள் உலகோரே….

நீங்களும் நானும் அடிமை வம்சத்தை சார்ந்தவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? ஆம் அரசியல்வாதியும், நம்மிடம் சம்பளம் வாங்கும் நமது வேலைக்கார்ர்கள் அரசு அலுவலர்களிடமும் நாம் அடிமையாய் கிடக்கிறோம். இந்தியா ஒரு ஜன நாயக நாடு என்று எவன் சொன்னாலும் அவன் வாயிலேயே போடுங்கள். சம்பளம் கொடுக்கும் முதலாளி வேலைக்காரனிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அவலத்தை எங்காவது கண்டிருக்கின்றீர்களா உலகோரே…. எம்மைப் பாருங்கள்.. எமது இந்தியாவைப் பாருங்கள். நாங்கள் வேலைக்கார்ர்களிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும் அவலத்தைப் பாருங்கள்… பார்த்து கை கொட்டிச் சிரியுங்கள்…

இப்படியெல்லாம் எழுதியும் பேசியும் பொது மக்களுக்கு உணர்வூட்டி அக்கிரச் செயல்களை செய்து வரும் இவர்களை அடக்க வேண்டுமென நினைத்து கொண்டிருந்த போது நான் இறங்க வேண்டிய ஸ்டேசன் வர இரயிலில் இருந்து இறங்கினேன். மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்த போது வழியில் இருந்த கடையில் சூடாக வடையும், டீயும் சாப்பிட்டு விட்டு கிளம்பினேன் ஒரு காலை இழுத்துக் கொண்டே…. எனது நிழலாய் பின் தொடர்ந்தது இந்திய ஜன நாயகம்.


komaalee@gmail.com

Series Navigation

இரயில் பயணங்களில்…

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

சந்திரவதனா


அப்போது எனக்கு 22வயதுகள் நிரம்பியிருந்தன. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும் படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது எனக்குப் புது அனுபவம். அதனால் சற்றுப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.

மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதால் எனது கர்ப்பமான வயிறு வெளியில் தெரியவில்லை. கர்ப்பமான பெண்களுக்குள்ள வழமையான இயல்புகள் என்னையும் விட்டு வைக்கவில்லை. சத்தியிலும், குமட்டலிலும் அதானாலான அசெளகரியங்களிலும் நான் நன்கு மெலிந்திருந்தேன். பூப்போட்ட பச்சை நிறச் சேலை உடுத்தியிருந்தேன். அதற்கு மச்சிங்காக பச்சை மேற்சட்டையும் என் உடம்போடு ஒட்டியிருந்தது.

என் கணவரின் சிபாரிசு இல்லாமலே எனக்கு உதவத் தயாராக இருந்தான் அந்த இளைஞன். ரெயின் வெளிக்கிட்டு, பிரிய மனமின்றி என் கணவர் பிரிந்த கையோடு அந்த இளைஞன் அவசரமாக எழுந்து என் இருக்கைக்கு வந்து விட்டான். ‘என்ன வேணும் ? ‘ அவன் கேட்ட விதமே எனக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை.

சடாரென்று எழுந்து நான் இன்னொரு இருக்கைக்கு நகர்ந்தேன். வெறுமையாக இருந்த அந்த இருக்கையில் இருந்து இவனைத் திரும்பிப் பார்த்தேன். இவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘வந்து இங்கே இரேன் ‘ என்பது போல சைகை செய்தான். நான் அவசரமாகத் திரும்பி விட்டேன்.

றாகம வரை பிரச்சனைகள் எதுவும் இல்லை. தனியாகத்தான் இருந்தேன். இவன் வந்து என் பக்கலில் அமர்ந்து விடுவானோ என்ற பயம் மட்டும் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.

நான் எதிர்பாராத ஒரு கணத்தில் றாகம புகையிரதநிலையத்தில், என் பக்கலில் இன்னொரு இளைஞன் வந்து அமர்ந்தான். நான் ஜன்னல் பக்கமாக நன்கு தள்ளி அமர்ந்தேன். அவன் என் பக்கம் திரும்பி மெதுவாகச் சிரித்தான். சாந்தமாக இருந்தான். முதலாமவன் மேல் இருந்த பயம் இவன் மேல் எனக்கு வரவில்லை. ஆனாலும் சங்கடமாக இருந்தது.

வேறெங்காவது இடமிருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். எல்லா இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. இரண்டாமவன் என்னோடு மெதுமெதுவாகப் பேச ஆரம்பித்தான். நான் கஸ்டப் பட்டுப் பதில் சொன்னேன். தனக்கு சாப்பாடு வாங்கப் போகும் போது எனக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வர வேண்டுமா எனக் கேட்டான். வயிற்றுக்குமட்டலுக்கு ஏதாவது சாப்பிட்டால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஒரு சான்ட்விச் வாங்கும் படி சொல்லிக் காசு கொடுத்தேன். காசை வேண்ட மறுத்தான். ‘காசு வேண்டாவிட்டால் எனக்கு சான்ட்விச் வேண்டாம் ‘ என்றேன். காசை வாங்கிக் கொண்டு போய், சான்ட்விச் வாங்கிக் கொண்டு வந்தான். அவன் மேல் கொஞ்சம் நன்றியாயிருந்தது.

இப்போது சரளமாக அவன் என்னுடன் பேசத் தொடங்கி விட்டான். பல்கலைக்கழகத்தில் படிக்கிறேன் என்றான். சாதாரணமாகக் கதைத்துக் கொண்டு போனவன் திடாரென ‘ஐ லவ் யூ ‘ என்றான். நான் திருமணமானவள் என்றேன். அவன் நம்பவில்லை. சுத்தமாக அவன் நம்பவில்லை. ‘நான் கர்ப்பமாகக் கூட இருக்கிறேன் ‘ என்றேன். அவன் நம்பவே இல்லை. நான் முழுப்பொய் சொல்வதாகவே அவன் நம்பினான். என்னைத் தன்னுடன் வவுனியாவுக்கு வந்து விடும்படி கேட்டான். நான் சம்மதித்தால் என் வீட்டுக்கு வரவும் தயாராக இருந்தான். தனது முகவரியைத் தருகிறேன் என்றான். ‘வேண்டாம் ‘ என்று சொல்லி விட்டேன்.

வுவுனியா புகையிரதநிலையம் வந்ததும் ரெயினை விட்டு இறங்க மனமின்றி அப்படியே இருந்தான். என்னுடன் யாழ்ப்பாணம் வரப் போகிறேன் என்றான்.

அவனது செய்கை சற்றுக் குழந்தைப் பிள்ளைத்தனமாகவே இருந்தது. ‘போய் உங்கள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடருங்கள் ‘ என்றேன். அரைமனதோடு இறங்கிச் சென்றான்.

வவுனியாவில் ரெயினால் இறங்கும் வரை அவன் வரம்பு மீறவுமில்லை. நான் கர்ப்பமாயிருக்கிறேன் என்பதை நம்பவுமில்லை.

இப்போது அவன் ஒரு பட்டதாரியாக இருக்கலாம். அல்லது எமது நாட்டின் போர் அவனை அடித்துப் புரட்டி அகதியாக்கியிருக்கலாம். அல்லது இன்னும் ஏதாவது நடந்திருக்கலாம். எதுவாயினும்…

அவனை என் நினைவுகளிலிருந்து முற்று முழுதாகத் தூக்கியெறிந்து விட முடியவில்லை. எப்போதாவது வந்து முகம் காட்டிப் போகிறான்.

சந்திரவதனா

ஜேர்மனி

27.5.2004

Series Navigation

இரயில் பயணங்களில்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

லாவண்யா


எங்கள் ஊாில் இருந்து தினமும் ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்து படித்துவர வேண்டிய அவசியம் என் சகோதரனுக்கு. பஸ் கட்டணம் இதுவரையில் 12 ரூபாய் 75 பைசாவாக இருந்துவந்தது. தமிழக அரசாங்கத்தின் மினிபட்ஜெட்டில் பஸ் கட்டணம் ஏற்றப்பட்டபிறகு, பதினேழரை ரூபாயாகிவிட்டது, அதன்பின்னர், விஷத்தில் ரெண்டு சொட்டு குறைத்துக்கொள்வதுபோல ஒரு ரூபாய் குறைத்திருக்கிறார்கள், எப்படியோ தினமும் ஏழு ரூபாய்க்குமேல் கூடுதல் செலவு என்பதென்னவோ உண்மை. புதிய கட்டணத்தின்படி ஒரு நாளைக்கு போக வர முப்பத்துமூன்று ரூபாய் செலவாகிறது.

இப்போது கடந்த சில நாட்களாய், அவனுக்கு ஒரு வேளைக்கு பயணம் செய்ய நான்குரூபாய்தான் ஆகிறது. அதாவது, ஒரு நாளைக்கு எட்டு ரூபாய். பேருந்துக் கட்டணத்தோடு ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு.

ஏதும் மந்திர தந்திரம் இல்லை, பஸ் கட்டணம் அதிகம் என்பது தொிந்தவுடன், உடனடியாக அவனும், அவன் நண்பர்களும் மற்ற வழிகளைத் தேடியிருக்கிறார்கள். நான்கு பேர் சேர்ந்து செல்கிற டாக்ஸி, வேன் போன்றவற்றை முயன்றுபார்த்து தோல்வி அடைந்தபிறகு, ரயில்வேத்துறையிடம் சரணடைந்திருக்கிறார்கள். அவர்கள் மாதத்துக்கு நூற்று அறுபது ரூபாய் வாங்கிக்கொண்டு, தினமும் இருவேளையும் பயணிக்க அனுமதிக்கிறார்கள். சனி, ஞாயிறுகள் தவிர்த்து மாதத்துக்கு இருபது நாட்கள் பயணம் செய்வதாய் வைத்துக்கொண்டு கணக்குபோட்டுப்பார்த்தால் ஒரு நாளைக்கு எட்டு ரூபாய்தான் ஆகிறது. இப்படி மொத்தமாய் சீசன் டிக்கெட் வாங்காமல் தினமும் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணித்தாலும் இருபது ரூபாய் அளவில்தான் செலவு, அதுவும் பேருந்துக் கட்டணத்தோடு ஒப்பிடும்போது குறைவு.

இதில் கஷ்டங்களும் இல்லாமல் இல்லை, முன்போல நினைத்த நேரத்தில் கிளம்பமுடியாது. ஒரு நாளைக்கு நூறு பஸ்களாவது ஓடிக்கொண்டிருந்த தடத்தில், இப்போது ஒரே ஒரு ரயில், அது காலை ஏழு பதினைந்துக்கு வருகிறதென்றால், அந்த நேரத்திற்குள் நாமும் புறப்பட்டாக வேண்டும். அதைவிட்டால் அவ்வளவுதான். பஸ் ஒன்றேகால் மணி நேரத்தில் போய்ச்சேர்கிற அதே இடத்துக்கு, ரயில் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

ஆனால் அரசாங்கம் உயர்த்தியிருக்கிற பஸ் கட்டணத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் மாதம் ஐநூறு ரூபாயாவது மிச்சமாகிறது, ஒரு நடுத்தரக் குடும்பத்துக்கு இது பொிய தொகை என்பதில் சந்தேகமே இல்லை.

இந்திய ரயில்வே உலகத்திலேயே மிக அதிகமான பணியாட்களைக்கொண்டது. உலகிலேயே இரண்டாவது மிகப்பொிய ரயில்வே இணைப்பும் இதுதான். இப்படி உலகளவில் புகழ்பெற்றிருக்கும் இந்திய ரயில்வேக்கு உள்ளூாில் அவ்வளவாய் நல்ல பெயர் இல்லை என்பது சோகமே. தாமதமான ரயில்கள், பராமாிப்பின்மை, விபத்துகள் – இப்படி இதற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும், ரயிலில் மக்கள் ஏறத்தயங்குவதற்கு முக்கியமான காரணம், அதிலிருக்கிற சவுகர்யங்கள் மக்களுக்கு சாியாக சொல்லப்படவில்லை என்பதுதான். பஸ் நிலையத்தை நன்றாகத் தொிந்துவைத்திருக்கிற மக்கள், ரயில் நிலையத்தை ஊருக்கு வெளியே எங்கோ ஒரு மூலையில் இருக்கிற பாழடைந்த கட்டிடம் அளவுக்குதான் மதிக்கிறார்கள்., பயணம் என்று வரும்போது பெரும்பாலானோர் ரயிலைப்பற்றி யோசிப்பதே இல்லை.

தமிழக அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது, மற்ற அரசுகளும் படிப்படியாக இதைச் செய்தாக வேண்டிய நிலைமையில் இருப்பதாக சொல்கிறார்கள், இந்த நிலைமை ரயில்வேத்துறைக்கு மிகவும் சாதகமானது. விழித்துக்கொண்டு செயல்பட்டால், பேருந்துகளின்மேல் நம்பிக்கையிழக்கிற, அல்லது அதற்கு ரொம்ப செலவாகிறதே என்று யோசிக்கிற மக்களைப் பிடித்துக்கொண்டுவிடலாம்.

இதற்கு முக்கியமாய் செய்ய வேண்டியது – விளம்பரம், அரசாங்க நிறுவனம் விளம்பரம் செய்யக்கூடாது என்பதெல்லாம் அந்தக்காலம், சேவை மனப்பான்மை என்பது இருக்க வேண்டியதுதான், ஆனால் ஒரு அரசாங்கத்துறை மக்களுக்கு சிரமம் தரும்போது, இன்னொரு துறை அதை நிவர்த்தி செய்ய முயல்வதில் தவறேதும் இல்லை. இன்றைய சூழலில் விளம்பரம் செய்யாமல் எந்தத் தொழிலும் பிழைக்கமுடியாது. பேருந்துக் கட்டணங்கள் உயர்ந்திருப்பதை நேரடியாக குறிப்பிட்டு விளம்பரம் செய்தாலும் குற்றமில்லை – இரண்டு கட்டணங்களையும் ஒப்பிட்டு எது குறைவு என்பதை அவர்களே தீர்மானிக்கச் சொல்லலாம். இந்த குறைவான கட்டணத்திலும்கூட, மாணவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு இன்னும் கட்டணச்சலுகைகள் அளிக்கிறது இந்திய இரயில்வே. இதுவும் சாியான அளவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பேருந்தோடு ஒப்பிடுகிறபோது நல்ல இருக்கைகள், பை, சூட்கேஸ் போன்றவற்றை வைப்பதற்கு நிறைய இடம், பெண்களுக்கு தனிப்பெட்டிகள், நீண்டதூரப் பயணங்களுக்கு முன்பதிவு வசதி, படுக்கை வசதி, கேன்ட்டான் வசதி, கழிப்பிட வசதிகள் போன்ற சவுகர்யங்கள் ரயிலில் உண்டு, அவையும் சொல்லப்படுவது அவசியம்.

வழக்கமாக இந்திய ரயில்வேயின் விளம்பரங்கள் – போஸ்டர்கள், வீடியோ படங்கள் போன்றவை ரயில்வே ஸ்டேஷனில் மட்டும்தான் வெளியிடப்படுகிறது, இதைவிட பொிய வேடிக்கை இருக்கமுடியாது. ஏற்கெனவே ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டவர்கள் மட்டும்தான் நம் வாடிக்கையாளர்களா ? அதற்கு வெளியே கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் – அவர்களை விளம்பரம் சென்றடைவது மிக அவசியம். ஆகவே இந்த விளம்பரங்களை பிரபல நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், விளம்பரப்பலகைகள் போன்றவற்றின்மூலமாக மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டும். குறிப்பாக விளம்பரப்பலகைகள் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்படுவது மிகவும் உதவியாக இருக்கும். யார்கண்டது, இப்படி பேருந்துத்துறையோடு நேரடியாக போட்டியிடுவதால் அவர்களும் கட்டணத்தை நியாயமான அளவுக்குக் குறைக்க முன்வரலாம் !

இதற்கு ஏற்றபடி ரயில்வேத்துறையும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும், நிறைய பஸ்கள் ஓடுகிற வழித்தடங்களில், ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும், ஏற்கெனவே ஓடுகிற ரயில்களிலும், பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அவசியம். தாமதமில்லாமல் ரயில்கள் ஓடுவதற்கு வழி செய்ய வேண்டும், ரயில் பெட்டிகளின் பராமாிப்புக்கும் நல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளம்பரங்களில் காட்டுகிற ‘சுகமான ‘ ரயில் பயணம் நிஜமாகவே சாத்தியமாவதற்கான வழிவகைகள் செய்யவேண்டும்.

சுருக்கமாய் சொன்னால் – எல்லா அரசாங்க அலுவலகங்களையும்போல இன்னும் மசமசவென்று தூங்கி வழிந்துகொண்டிருக்காமல், ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டியையோ, குளிர்பானத்தையோ அறிமுகப்படுத்துகிற நிறுவனம் எப்படி அதைப் பொிய அளவில் விளம்பரப்படுத்துமோ, அப்படி இரயில் சேவையும் சொல்லப்பட வேண்டும்.

இதனால் பஸ்ஸில் பயணிக்கிறவர்கள் எல்லோரும் ரயிலுக்குத் தாவிவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதிகம் விளம்பரங்கள் இல்லாத சூழ்நிலையிலேயே இந்த கட்டண உயர்வுக்குப்பிறகு பலர் ரயிலேறத் துவங்கிவிட்டார்கள், விளம்பரங்கள் அதை இன்னும் வேகப்படுத்தும். நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிற இந்திய ரயில்வேத்துறை லாபம் பார்க்க இது நல்ல வாய்ப்பு, மற்றபடி இதைப் பயன்படுத்திக்கொள்வது, ரயிலே, உன் சமத்து !

***

20 12 2001

***

Series Navigation