இன்ப வேரா ,துன்ப போரா ?

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

அனு


வடிச்ச சோறும் வறண்டு போச்சு
புடிச்ச கையும் துவண்டு போச்சு
வச்ச பூவும் வாடி போச்சு
மத்தது எல்லாம் வெறுமை ஆச்சு !

மரத்தோரம் மஞ்சள் பூசி
மணிகணக்கா காத்து இருக்கேன்
இலைகள் எல்லாம் உரசியபடி
இன்ப கானம் இசைக்குதே !
கிளைகள் எல்லாம் படர்ந்து பிண்ணி
பரவசத்த கொடுக்குதே !
இன்ப வேரா நான் இருக்க
துன்பபோர் தான் எதுக்கு ?

அன்புபேதை நானிருக்க
அழிவுபோதை தான் எதுக்கு ?
குடிக்காதே என் தலைவா
குடிக்காதே என் கணவா,
குலைக்காதே என் கனவ,,
வசந்தத்த வீட்டில் விட்டு ,ஏன்
வயிருவேக உன் தலைப்பா கட்டு ?

குடிக்காதே என் தலைவா,,
தளருதே என் வயசு,
குளறுதே என் இளமனசு !
அன்பு போதை நான் கொடுக்க
அழிவுபோதை தான் எதுக்கு ?
துன்ப போர் தான் நமக்கு ?

அனு,,

Series Navigation

அனு

அனு